நாட்டின்
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று (17) சிறிதளவிலான மழைக்கு
சாத்தியம் காணப்படலாம் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
மற்றும் மத்திய, சப்ரகமுவ மாகாணங்களிலும்
காலி மாத்தறை மாவட்டங்களிலும் மாலை மற்றும் இரவு நேரத்தில் இடியுடன் கூடிய
மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
பிரதான நகரங்களின் காலநிலை
அநுராதபுர மாவட்டத்தில் வெப்ப நிலையானது
ஆகக்கூடியது 31 செல்சியஸ் பாகையாகவும் ஆகக் குறைவான வெப்பநிலை 22
செல்சியஸ் பாகையாகவும் காணப்படுவதோடு சிறிதளவிலான மழை காணப்படலாம்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆகக்கூடியது 29 செல்சியஸ் பாகையாகவும் ஆகக் குறைவான
வெப்பநிலை 20 செல்சியஸ் பாகையாகவும் காணப்படும் அதேவேளை யாழ்ப்பாணம் -
மன்னார் ஆகிய பிரதேசங்களிலும் மிதமான காலநிலை காணப்படும்.
மட்டக்களப்பில் ஆகக்கூடுதலான வெப்பநிலையாக
29 செல்சியஸ் பாகையாகவும் ஆகக் குறைவான வெப்பநிலை 23 செல்சியஸ்பாகையாகவும்
காணப்படும் அதேவேளை சிறிதளவிலான மழைக்கு சாத்தியம் காணப்படும். கொழும்பு
மாவட்டத்தில் ஆகக்கூடுதலான வெப்பநிலை 32 செல்சியஸ் பாகையாகவும் ஆகக்
குறைவான வெப்பநிலை 23 செல்சியஸ் பாகையாகவும் காணப்படுவதோடு காலையில்
பனியுடன் கூடிய காலநிலை காணப்பட்டு பின்னர் மிதமான காலநிலை காணப்படலாம்.
கண்டி நுவரெலியா இரத்தினபுரி கொழும்பு காலி மாவட்டங்களில் சிறிதளவிலான மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டில்
ஆகக்கூடிய வெப்பநிலையாக அம்பாந்தோட்டை இரத்தினபுரி மாவட்டத்தில் 33.5 செல்சியஸ்பாகையும் குறைந்தளவு வெப்பநிலையாக நுவரெலியா மாவட்டத்தில் 9.8 செல்சியஸ் பாகையும் காணப்படுகிறது.
ஆகக்கூடிய வெப்பநிலையாக அம்பாந்தோட்டை இரத்தினபுரி மாவட்டத்தில் 33.5 செல்சியஸ்பாகையும் குறைந்தளவு வெப்பநிலையாக நுவரெலியா மாவட்டத்தில் 9.8 செல்சியஸ் பாகையும் காணப்படுகிறது.
ஆகக்கூடியளவு மழை பதிவாகிய பிரதேசம்
நாட்டில் ஆகக்கூடியளவு மழைவீழ்ச்சியாக தெனியாய பிரதேசத்தில் 48.1 மில்லிமீற்றர் பதியப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment