25 Jan 2015

யாராக இருந்தலும், ஊழல் குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்டமைக்கான ஆதாரங்கள் இருப்பின் எமக்கு அறியத்தரவும் - பா. அரியநேத்திரன்.

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசியல்வாதிகளாக இருக்கலாம், அமைச்சர்களாக இருக்கலாம் அரச உயர் அதிகாரிகளாக இருக்கலாம் கடந்த அரசாங்கத்துடன் சேர்ந்து ஊழல் குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்டமைக்கான ஆதாரங்கள் இருப்பின் எமக்கு இரகசியமாகவோ அல்லது பகிரங்கமாகவோ தந்து உதவுக்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்

தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பாக மக்களை தெளிவு படுத்தும் கூட்டம் ஒன்று அரசடித்தீவில் நேற்று சனிக்கிழமை மாலை (24) இடம் பெற்றது.  இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இக் கோரிக்கையினை மக்களிடம் முன்வைத்தார்.

இதன்போது அவர் மேலும் உரையாற்றுகையில்…
தற்பொழுது முன்னாள் ஜனாதிபதியைப் பற்றியும் அருடன் சார்ந்தவர்கள் பற்றியும் பல்வேறுபட்ட ஊழல் குற்றச்சாட்டுக்கள் வெளிவந்த வண்ணமுள்ளன இந்த ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக  ஒரு குழு உருவாக்கப்பட்டுள்ளது. அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக  சுமந்திரன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். தற்பொழுது இருக்கின்ற பிரச்சினை என்னவென்றால் கடந்த அரசுடன் சேர்ந்து அரசியல்வாதிகளாக இருக்கலாம,; அமைச்சர்களாக இருக்கலாம,; அதிகாரிகளாக இருக்கலாம் நீங்கள் அறிந்த வகையில் ஊழல் மேசடியில் ஈடுபட்டமைக்கான ஆதாரங்கள் இருந்தால் எங்களிடம் இரகசியமாகவோ அல்லது வெளிப்படையாகவோ தந்து உதவுங்கள்.

ஏன் இதனை நான் கூறுகின்றேன் என்றால் அந்த விடயங்களை வைத்துக் கொண்டு கடந்தகால ஆட்சி எவ்வாறு இடம் பெற்றுள்ளது என்பதனை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதென்பது ஒரு விடயம்.  மற்றும் இவர்களை நாங்கள் தண்டிக்க வேண்டும் என்பதற்காக அல்ல இவ்வாறனவர் இனிவரும் காலங்களில் நன்றாக நடக்க வேண்டும் என்பதற்காகவும், நல்ல ஆட்சி நடக்க வேண்டும் என்பதற்காகத்தான் இதனை மேற்கொள்ளுகின்றோம்.

மற்றும் யாராவது காணாமல் பேயிருந்தால் அல்லது சிறையில் தடுத்து வைத்து பார்க்க முடியாமல் இருந்தால் அதனையும் எமக்கு தந்து உதவுங்கள் சிலவேளைகளில் அதனை நாங்கள் கண்டு பிடிப்பதற்கு ஒரு சந்தர்ப்பமாக இருக்கும். கூட்டமைப்பை நிற்சயமாக முழுமையாக ஆதரிக்க வேண்டும் இதனால் மாத்திரம் தான் இந்த மாற்றத்தினை நாங்கள் தொடர்ச்சியாக தக்கவைத்துக் கொள்வேண்டும் என நான் எதிர்பார்க்கின்றேன்.

ஐனாதிபதித் தேர்தலின் பின்னர் மக்களை தெளிவுபடுத்தி இடம் பெறும் முதலாவது  கூட்டமாகத்தான் இதனை நான் பார்க்கின்றேன். உண்மையில் தற்போது இடம் பெற்றுள்ள அரசியல் மாற்றம் பற்றி நீங்கள் தெளிவாக அறிந்திருப்பீர்கள்.

நாங்கள் இத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போது தெளிவாக கூறியிருந்தோம் அதிலும் நான் தெளிவாக கூறியிருந்தேன் என்னவென்றால்  உண்மையில் இந்த மாற்றம் வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கவில்லை என்பதனை நான் உங்களுக்கத் தெளிவாக கூறுகின்றேன். தற்பொழுது ஜனாதிபதியாக இருக்கின்ற மைத்திரபால சிறிசேன அவர்கள் ஆட்ச்சியை பிடிப்பார் என்ற நம்பிக்கை எனக்கு ஒரு வீதம் கூட தனிப்பட்ட முறையில் இருக்கவில்லை. பலர் கூறினார்கள் ஆட்சிமாற்றம் வரும் எனக் கூறினார்கள். இதன் போது மக்களுக்கு நான் தெளிவான செய்தி ஒன்றைக் கூறியிருந்தேன். ஆட்சி மாற்றம் வருமா? இல்லையா? என்பது எங்களுக்கு பிரச்சினை இல்லை.

இந்த வடகிழக்கு மக்களுக்கு படுகொலையை செய்து முள்ளிவாய்க்காலில் ஒரு இனப்படு கொலையைச் செய்து இன்னும் தொடர்ச்சியாக அவலங்களை செய்து கொண்டு இருக்கின்ற கொலையாளனான மஹிந்தராஜபக்சவுக்கு  வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வில்லை என்கின்ற செய்தியை அவருக்கு நாங்கள் காட்ட வேண்டும் என்பதற்காகத்தான் நீங்கள் வாக்களிக் வேண்டுமே தவிர தென்பகுதி மக்கள் வாக்களித்து வெற்றி பெற்றால் எங்களுக்கு கவலையில்லை இந்த செய்தியை  கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் கூறியிருந்தோம்.

ஆனால் தற்போது தற்செயலாக ஆட்சி மாற்றம் என்பது இடம் பெற்றிருக்கின்றது நிற்சயமாக ஆட்சி மாற்றம்  இடம் பெறும் போது பல்வேறுபட்ட தடைகள், பல்வேறுபட்ட பிரச்சினைகள், பல்வேறுபட்ட அடாவடித்தனங்களுக்கு மத்தியில்தான் இந்த ஆட்சிமாற்றம் என்பது இடம் பெற்றிருக்கின்றது.
கடந்த ஒன்பதாம் திகதி ஜனாதிபதி பதவியேற்ற பின்பு வெளிநாட்டில் இருந்து என்னிடம் ஒரு ஊடகவியலாளர் தொலைபேசி ஊடாக தற்போது இலங்கையில் ஆட்சி மாற்றம் தற்போது ஏற்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி அவர்கள் ஆட்சி மாற்றத்தினை ஏற்றுக் கொண்டு தானகவே வெளியேறி இருக்கின்றார் இது சம்மந்தமாக தங்கள் கருத்து என்ன? என்று வினாவி இருந்தார்.

அலரிமாளிகையில் இடம் பெற்ற விடையம் தெரியாத நிலையில் இதற்கு நான் பதிலளிக்கையில் இவர்  ஒரு நல்ல ஜனாதிபதி எனவும்  பதவிக்காலம் முடியும் முன்பு தேர்தல் நடாத்தி இவ்வாறு வெளியேறியமை மக்களின் நன்மதிப்பினை பெறுவதற்காக இவ்வாறு நடந்திருக்கின்றார் இவரை நாங்கள் மதிக்கத்தக்க ஜனாதிபதியாக நாங்கள் பார்க்க வேண்டிய தேவை இருக்கின்றது. என்ற கருத்தினை நான் கூறியிருந்தேன்.

பின்னார் அடுத்த நாள் பத்தம் திகதிதான் அலரிமாளிகையில் இடம் பெற்ற விடயத்தினை அறியக் கூடியதாக இருந்தது. இதனை நினைத்து மனவேதனை அடைந்தேன் நிற்சயமாக தற்போது இடம் பெற்றுள்ள ஆட்சி மாற்றங் காரணமாக தற்போதைய ஜனாதிபதி ராஜதந்திரம், கூட்டுச்சேர்ந்துள்ள அணிகளின் பலம் அவர்களின் நடவடிக்கை காரணமாகத்தான் அவர் அங்கிருந்து வெளியேறி இருந்தாரே தவிர அவர் திட்டமிட்டு அந்த பதவியில் இருந்து விலகவில்லை என்பது உண்மை.

எனவே இதனை வைத்துக்கொண்டு எமக்கு சுதந்திரம் கிடைத்து விட்டது என எவரும் நினைக்கக் கூடாது இது தற்காலிகம் மாந்திரம் தான் இதனை நிரந்தரமான மாற்ற வேண்டுமாக இருந்தால் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் நிற்சயமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பை நிரந்தரமாக ஆதரிக்க வேண்டும். எனவும் அவர் தெரிவித்தார்.
SHARE

Author: verified_user

0 Comments: