இலங்கைக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணி மூன்று விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது.
அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இலங்கை, முன்னதாக நியூஸிலாந்துடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஏழு ஒருநாள் போட்டிகளில் விளையாடுகின்றது.
இதில் நடைபெற்று முடிந்துள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் நியூஸிலாந்து வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ள நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று ஆரம்பமானது.
இதில் நாணயசுழற்சியில் வென்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
இதன்படி அந்த அணி சார்பாக களமிறங்கிய மஹெல ஜெயவர்த்தன அபாரமாக ஆடி 104 ஓட்டங்களை விளாசினார்.
இது சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அவருடைய 18வது சதமாகும். எனினும் இலங்கை அணி சார்பாக துடுப்பெடுத்தாடிய மற்றைய வீரர்கள் எவரும் அரைச்சதம் கூட கடக்காத நிலையில் 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்த அந்த அணி 218 ஓட்டங்களைக் குவித்தது.
இதன்படி 219 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த நியூஸிலாந்து அணி, 43 ஓவர்களில் ஏழு விக்கெட்டுக்களை இழந்து இலக்கை (219) எட்டியது.
இதன்படி 42 பந்துகள் கைவசம் இருக்க 3 விக்கெட்டுக்களால் நியூஸிலாந்து வெற்றியீட்டியுள்ளது.
அந்த அணி சார்பில் கோரி அன்ரசன் 81 ஓட்டங்களையும், பிரன்டன் மெக்கலம் 51 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

0 Comments:
Post a Comment