13 Jan 2015

எயார் ஏசியா விமானத்தின் விமானிகளின் குரல் பதிவேடும் கண்டுபிடிப்பு!

SHARE
இந்தோனேசிய கடலில் விழுந்து மூழ்கிய ஏயார் ஏசியா விமானத்தின் கறுப்பு பெட்டியின் மற்றொரு பாகம் இன்று (13) ​செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளது என மெட்ரோ நிறுவனசெய்திகள் தெரிவித்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி 162 பேருடன் இந்தோனேசியாவில் உள்ள சுரபயா நகரில் இருந்து சிங்கப்பூருக்கு கிளம்பிய ஏயார் ஏசியா விமானம் QZ 8501 ராடாரில் இருந்து மாயமானது.

பின்னர் விமானம் இந்தோனேசியாவின் ஜாவா கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாக அறிவிக்கப்பட்டது. ஜாவா கடலில் இருந்து இதுவரை 48 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. கடலில் விழுந்த ஏர்ஏசியாவின்  கறுப்பு பெட்டி, விமானத்தின் வால் உள்ளிட்ட பாகங்களும் மீட்கப்பட்டன.

இந்நிலையில் நேற்று (12) திங்கட்கிழமை விமானத்தின் கறுப்பு பெட்டியின் ஒரு பாகமான தரவுப் பதிவேடு ( Data Recorder - டேட்டா ரெக்கார்டர்)  மீட்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கறுப்பு பெட்டியின் மற்றொரு பாகமான Cockpit Voice Recorder (காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர்) அதாவது விமானிகள், விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு பேசியவற்றை பதிவு செய்த கருவி கிடைக்கவில்லை.

அது கிடைக்கப்பெற்றால் இன்னும் அதிகமான உண்மை நிலவரங்களை அறிந்து கொள்ளலாம் என கருத்து வௌியிட்டனர். இந்நிலையிலேயே வாய்ஸ் ரெக்கார்டர் கருவி கிடந்த இடம் தெரிந்தபோதிலும் அதை எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில் இன்று (13) செவ்வாய்க்கிழமை  Cockpit Voice Recorder (காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர்) மீட்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விமானம் விபத்துக்குள்ளாக என்ன காரணம் என்பது தெரிய வரும். விமானம் மோசமான வானிலை காரணமாக விபத்துக்குள்ளானது என்று தான் இதுவரை கூறப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
SHARE

Author: verified_user

0 Comments: