மட்டக்களப்பு மாவட்டத்தில் 1982 முதல் 2009 வரையான காலப் பகுதியில் காணாமல்
போனோரை கண்டுபிடித்து தருமாறு கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று
முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை மட்டக்களப்பு மஹாத்மா காந்தி பூங்காவில் காணாமல் போனோரின் உறவினர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காணாமல் போனோரின் உறவுகளின் குடும்பங்களுடன் மட்டக்களப்பு காந்திசேவா சங்கமும் இணைந்து இதனை ஏறபாடு செய்திருந்தது.
இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா,
பா.அரியநேத்திரன் மற்றும் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களும்
கலந்து கொண்டனர்.
இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கான மகஜர்கள் பாராளுமன்ற உறுபபினர்களிடம் கையளிக்கப்பட்டன.
0 Comments:
Post a Comment