1 Jan 2015

வெள்ளத்தினால் சேதமடைந்த வீதிகளின் விபரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன

SHARE
அண்மையில் பெய்த பலத்த மழைவெள்ளத்தினால் மட்டக்களப்பு மாவட்டம், பட்டிப்பளை பிரதேசத்திற்குட்பட்ட அம்பிளாந்துறை - தாந்தாமலை வீதி மிகமோசமான நிலையில் சேதமடைந்துள்ளது.

மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்குச்  சொந்தமான சுமார் 10 கிலோ மீற்றர் நீளம் கொண்ட வீதி முற்றாகச் சேதமடைந்துள்ளமையால் இவ்வீதியினைப் பயன்படுத்தும் பிரயாணிகளும், விவசாயிகளும் மிகுந்த சிரமங்களை எதிர் கொண்டு வருகின்றனர்.

தற்போது மழை ஓய்ந்து மக்கள் இயல்வு நிலைக்குத் திரும்பியுள்ள இவ்வேளையில் வீதி அபிவிருத்தித் திணைக்களம் இவ்வீதியைப் புணரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேணடும் என அவ்வீதியைப் பயன்படுத்தும் பொதுமக்கள் தெரிவிக்கின்றர்.

இவ்வீதியின் இருமருங்கிலும் ஆயிரக்கணக்கான நெல் வயல்கள் அமைந்துள்ளன. எதிர் வரும் பெப்ரவரி மாதம் நெல் அறுவடை ஆரம்பிப்பதற்கு முன்னர் இவ்வீதியை வீதி அபிவிருத்தித் திணைக்களம் புணரமைக்க முன்வர வேண்டும் என அப்பகுதியிலுள்ள விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
 
மட்டக்களப்பு மாவடத்தில் வீதி அபிவிருத்தித் திணைக்களத்தி திணைக்களத்தின் கீழ் வருகின்ற வீதிகளில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் சேதமடைந்த வீதிகள் தொடர்பான தகவல்கள் திரட்டப் பட்டு வருகின்றன.

அத்த தகவல்கள் திரட்டும் வேலைகள் பூர்தியடைந்ததும், அம்பிளாந்துறை – தாந்தாமலை வீதி புணரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இவ்வீதியின் புணரமைப்புக் குறித்து வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாட்ட பிரதம பொறியியலாளர் ஏ.எம்.றிஸ்வியிடம் இன்று (01) தொடர்பு கொண்டு கேட்டபோது தெரிவித்தார்.




SHARE

Author: verified_user

0 Comments: