நாட்டைச்
சூழவுள்ள அனைத்து கடலோரங்களிலும் இன்று (17) மிதமான காலநிலையுடன் வெயில்
வெட்கைக்கான சாத்தியம் நிலவுவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
வடமேற்கு கரையோரமாக மழைக்கான சாத்தியம்
நிலவுவதாகவும் காற்றின் வேகம் மணிக்கு 30 - 40 கிலோ மீற்றர் வேகத்தில்
காற்று வீசலாம் எனவும் சில நேரங்களில் இக்காற்றின் வேகம் மணிக்கு 50 கிலோ
மீற்றர் வேகத்தில் வீசலாம் எனவும் வானிலை அவதான நிலையம் தகவல்
வெளியிட்டுள்ளது.
அத்துடன் மன்னார் காலி புத்தளம் வரையான
கடலோரங்களில் காற்றின் வேகம் சற்று அதிகரிக்கலாம் எனவும் இது மணிக்கு 50
கிலோ மீற்றர் வேகத்தில் வீசலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு
தெற்கு வான்நிலைகளில் நிலவிவரும் முகில்கூட்டங்களால் தீடீரென காற்று
வீசக்கூடிய சந்தர்ப்பம் நிலவுவதாகவும் காற்றின் வேகம் 50 - 60 கிலோமீற்றர்
வேகத்துக்கு அதிகரிக்ககூடுமெனவும் தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக மீனவர்கள் மற்றும் கடற்படையினர் அவதானமாக செயற்படுமாறு வேண்டப்படுகின்றனர்.
0 Comments:
Post a Comment