2 Jan 2015

கோலியைக் கவுக்க புது வியூகம்

SHARE
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய வீரர் விராட் கோலி இதுவரை 3 சதங்களுடன் 499 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.

சிட்னியில் வருகிற 6-ம் திகதி தொடங்கும் கடைசி டெஸ்டில் அவரது ஆதிக்கத்தை கட்டுப்படுத்த அவுஸ்திரேலியா தனிவியூகங்களை அமைத்து வருகிறது.

இது பற்றி அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹாஸ்லேவுட் கூறுகையில், ‘அடிலெய்டு மற்றும் மெல்போர்ன் டெஸ்டில் விராட் கோலி சிறப்பாக விளையாடினார்.

அவரது விக்கெட் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. தாக்குதலை தொடுத்து அவரது விக்கெட்டை சீக்கிரம் கைப்பற்றி விட்டோம் என்றால், மற்ற விக்கெட்டுகள் விரைவில் விழுந்து விடும்.

விராட் கோலியை சாய்க்க நாங்கள் ஏதாவது ஒரு புது யுக்தியுடன் வருவோம். கோலி வேகமாக, சுதந்திரமாக ஓட்டங்களைக் குவிக்க விரும்புவார். எனவே அவருக்கு தொடர்ந்து பந்து வீசி ஓட்டங்களை எடுக்க விடாமல் தடுமாற வைக்க வேண்டும்.

நீண்ட நேரம் ஓட்டங்களை எடுக்க விடாமல் கட்டுப்படுத்தி விட்டால், அதன் பிறகு நெருக்கடியில் தவறான ஷாட் அடித்து ஆட்டம் இழந்து விடுவார் என்று நம்புகிறோம்.’என்றார்.
SHARE

Author: verified_user

0 Comments: