7 Jan 2015

அதிகாரிகள் அச்சுறுத்தப்பட்டால் வாக்கெண்ணும் பணி உடனே நிறுத்தப்படும்

SHARE
இம்முறை ஜனாதிபதித் தேர்தல் சுதந்திரமானதாகவும் நீதியானதாகவும் நடக்கும் என 100% நம்பிக்கை இருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இதனை பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவும் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் ஏற்றுக் கொண்டுள்ளதாக தேர்தல்கள் செயலகத்தில் இன்று (07) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எந்தவொரு தேர்தல் வாக்கெண்ணும் நிலையத்தில் பணியாற்றும் ஊழியருக்கும் அச்சுறுத்துல் விடுக்கப்பட்டால் உடனடியாக வாக்கெண்ணும் நடவடிக்கை கைவிடப்படும் என அவர் கூறினார்.

இத்தேர்தலில் பொலிஸாருக்கு அதிகாரங்களை வேண்டியளவு பயன்படுத்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதென அவர் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினரின் ஒத்துழைப்பை பெற முடிவு செய்யப்படவில்லை என்றும் இராணுவத்தை பயன்படுத்துவதாக வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை என்றும் தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டார்.

சிலவேளைகளில் இராணுவ பாதுகாப்பு தேவை என பொலிஸ்மா அதிபர் இராணுவத் தளபதியிடம் கோருமிடத்து இராணுவத்தின் ஒத்துழைப்பு பெற்றுக் கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.
SHARE

Author: verified_user

0 Comments: