2 Jan 2015

அம்பாறை மாவட்ட அரச அதிபராக இருந்து பணியாற்றுவதை பெரும் கௌரவமாக கருதுகின்றேன் - அரச அதிபர் நீல் டீ அல்வீஸ்

SHARE
2015ம் ஆண்டு புதுவருடத்தையிட்டு அம்பாறை மாவட்ட செயலகத்தில் எற்பாடு செய்யப்பட்ட அரச உத்தியோகத்தர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வும் ஓய்வுபெற்ற உத்தியோகத்தர்களை கௌரவிக்கின்ற நிகழ்வும் நேற்று (01) நடைபெற்றது.
அம்பாறை மாவட்ட செயலாளர் நீல் டீ அல்வீஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர்களான எம்.ஐ.அமீர், கே.விமலநாதன், மாவட்ட செயலக பிரதம கணக்காளர் ஐ.எம்.ஹூசைன், மாவட்டதிட்டமிடல் பணிப்பாளர் எஸ்.அன்வர்தீன், பணிப்பாளர்கள் பிரதிப் பணிப்பாளர்கள், உதவிப் பணிப்பாளர்கள் உட்பட மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் மாவட்ட செயலாளர் நீல் டீ அல்வீஸ் உரையாற்றுகையில்,
2015ம் ஆண்டின் கருப்பொருளாக 'ஆசியாவின் ஆச்சரியமிக்க பொருளாதாரம்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுமக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெரும் அரசாங்க உத்தியோகத்தர்களாகிய நாம் அனைவரும் பொதுமக்களின் சேவகர்களாக அவர்களை மதித்து பலதரப்பட்ட தேவைகளுடன் பல்வேறு தூரப் பிரதேசங்களிலிருந்தும் எமது சேவையினை நாடி வருகின்ற போது அவர்களை நாம் அன்போடு அனுகி வரவேற்று அவர்களின் பிரச்சினைக்கு தீர்வினைப் பொற்றுக் கொடுக்கின்ற பணியினை செய்யவேண்டும்.
அம்பாறை மாவட்டத்தை பொறுத்த வரையில் நான்கு இனங்களைச் சேர்ந்த இரண்டு மொழி பேசக்கூடியவர்கள் வாழ்கின்றனர். அவர்களிடத்தில் நான் எந்தவித பாகுபாடுகளும் இன்றி அரச அதிபராக இருந்து பணியாற்றுவதை பெரும் கௌரவமாக கருதுகின்றேன்.
எனது வலதும் இடதுமாக ஒரு முஸ்லிம் மேலதிக அரச அதிபராக எம்.ஐ.அமீர் அவர்களும் ஒரு தமிழ் மேலதிக அரச அதிபராக கே.விமலநாதன் அவர்களும் இன்னம் பலரும் எனக்கு பக்கபலமாக இருந்து இந்த மாவட்டத்தின் அபிவிருத்திக்கும் ஒற்றுமைக்கும் பங்களிப்பு செய்து வருகின்றனர்.
சென்ற வருடம் எம்முடன் இந்த மாவட்ட செயலகத்தில் இருந்த பணியாற்றிய அனைவருக்கும் நான் நன்றி கூறிக்கொள்கின்றேன்.
எனவே நாம் அனைவரும் பொறுப்புணர்ச்சியுடனும் அற்பணிப்புக்களுடனும் 2015ம் வருடத்தில் மக்களுக்கு பணியாற்றுவோம் எனவும் கூறினார்.
SHARE

Author: verified_user

0 Comments: