இலங்கையின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக மைத்திரிபால
சிறிசேன இன்று மாலை சத்தியப் பிரமாணம் செய்வார் என ஐக்கிய தேசியக்
கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வு டொரிங்டன் பகுதியில் அமைந்துள்ள சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறலாம் என கூறப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பை ஏற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அலரி மாளிகையில் இருந்து வெளியேறிச் சென்றுள்ளார்.
இன்று (09) அதிகாலை எதிர்கட்சித் தலைவருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து ஜனாதிபதி இந்த முடிவை எடுத்துள்ளார்.
புதிய ஜனாதிபதி தடைகள் இன்றி தமது கடமைகளை ஆற்றவென இடமளித்து அதிகாரத்தை வழங்கி தான் அலரி மாளிகையில் இருந்து செல்வதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

0 Comments:
Post a Comment