களனி ரஜமஹா விகாரையில் ஜனாதிபதி உரை!
நாம் தேர்தல் காலத்தில் நாட்டு மக்களுக்கு
வழங்கிய வாக்குறுதிக்கு அமைய செயற்பட்டு சமாதானம் நிறைந்த நாட்டைக்
கட்டியெழுப்புவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என்று ஜானதிபதி
மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
களனி ராஜமகா விகாரையில் நேற்று முன்தினம் நடைபெற்ற வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ந்தும் உரையாற்றுகையில்,வரலாற்று சிறப்புமிக்க களனி ரஜமகா விகாரைக்கு நாமெல்லோரும் வருகை தந்து கெளரவத்திற்குரிய தேரர்களின் அனுசாசனத்திற்கு ஏற்ப பிங்கம வழிபாட்டில் மிகுந்த சந்தோசத்துடன் நாம் கலந்து கொண்டிருக்கும் சந்தர்ப்பம் இது.
எமது புதிய அரசாங்கத்திற்கு மக்கள் ஆணை வழங்கியுள்ளார்கள். அதனால் இந்நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும், ஆற்ற வேண்டிய பொறுப்புக்கள் கையளிக்கப்பட்டுள்ளவர்கள் என்ற வகையில் நாம் மகாசங்கத்தினரின் ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் பெற்று செயற்படுவோம் என்பதை முதலில் குறிப்பிட விரும்புகின்றேன்.
வரலாற்று சிறப்புமிக்க களனி ரஜமகா விகாரையின் பின்புலம் மற்றும் வரலாற்று அடிப்படை தொடர்பாக இங்கு உரையாற்றுவதற்கு நான் எதிர்பார்க்கவில்லை. எமது தாய்நாட்டு மக்களின் மேம்பாட்டுக்காக நாம் அரசாங்கம் என்ற வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது பெளத்த சாசனத்தை மேம்படுத்துவதற்காக சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்.
இவ்வைபவத்தில் பிரதமர் குறிப்பிட்ட இந்த புனித பிரதேசத்தின் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகளை நாம் எவ்வாறு முன்னெடுக்க விருக்கின்றோம் என்பதை நான் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.இந்த அபிவிருத்தி திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை நாம் நடைமுறைப்படுத்துவோம். சகல மக்களுக்கிடையிலும். சமயங்களுக் கிடையிலும் நல்லிணக்கம், சமாதானம் நிறைந்த வளமான பொருளாதாரத்தைக் கொண்ட சுபீட்சமான நாட்டைக் கட்டியெழுப்புவதே எம்மெல்லோரதும் பொறுப்பும் கடமையுமாகும்.
பிரதமர் குறிப்பிட்ட படி இலங்கை வரலாற்றில் அரசியல் கட்சி முறை ஆரம்பமான நாள் முதல் இற்றை வரையான காலத்தை எடுத்துப் பார்த்தால் நாம் அமைத்துள்ள அரசாங்கம், நாம் செற்படும் விதம் என்பன எமது நாட்டுக்கும் மக்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் புதிய அனுபவமாகும்.நாட்டிலுள்ள இரண்டு பிரதான அரசியல் கட்சிகளதும் தலைவர்களுடன் நாம் தேர்தலில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதி படி அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கி தேசிய அரசாங்கத்தை தற்போது அமைத்துள்ளோம்.
கடந்த சில தசாப்தங்களாக நாட்டில் ஏற்பட்ட வெவ்வேறு பிரச்சினைகள் மற்றும் சவால்களின் போது இந்நாட்டு மக்கள் தேசிய அரசாங்கத்தின் தேவையை வலியுறுத்தினர். அதனால் நாம் நாட்டின் எதிர்காலத்தின் நிமித்தம் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது தேசிய அரசாங்க எண்ணக்கருவை செயற்படுத்துவது மிகவும் முக்கியமானது.
எமது அனுநாயக்க தேரர்களின் போதனைகளில் இளவரசர்கள் ஆட்சி செய்த விதத்தை குறிப்பிட்டனர். சமாதானமாக ஒன்றுசேர்ந்து சமாதானமாக கலைந்து செல்லுதல். சமாதானமாகக் கலந்துரையாடுதல் என்ற விடயத்திற்கு அமைய நாமெல்லோரும் அறிவு, அனுபவம், நற்பண்பு, ஒழுக்கம் என்பவற்றுக்கு முன்னுரிமை அளித்து செயற்படுவது எமது நாட்டின் எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியமானது.
நாம் தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய செயற்பட்டு அமைதி, சமாதானம் நிறைந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக நாம் எப்போதும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என்பதை இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பெளத்த புனித பூமியில் மகா சங்கத்தினரின் முன்பாகக் கூறுகின்றேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ,அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையானோர் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.

0 Comments:
Post a Comment