23 Jan 2015

மட்டு நகர் மண்முனை மேற்கில் பொங்கல் விழா நிகழ்வு

SHARE


- வரதன்-  

இந்து சமய அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை மேற்குப் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில்  செவ்வாயக்கிழமை(20) காலை பொங்கல் விழா நடைபெற்றது.

பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட  கிராமசேவகப் பிரிவிலுமுள்ள விவசாயிகள் மண்முனை மேற்குப் பிரதேச செயலகம் சமூக மட்ட அமைப்புக்களும் ஒன்றிணைந்து இவ்விழாவினை ஏற்பாடு செய்திருந்தனர்.

பொங்கல் விழா நிகழ்வு மண்முனை மேற்குப் பிரதேச செயலாளர் எஸ்.சுதாகரன் தலைமையில் இடம்பெற்றது. செயலக அதிகாரிகள் ஊழியர்கள் விவசாயிகள் பொதுமக்கள் போன்றோர் கலந்துகொண்டதுடன் 40 பொங்கல்ப் பானைகள் வைத்துப் பொங்கல் விழா சிறப்பாக நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.





SHARE

Author: verified_user

0 Comments: