22 Jan 2015

கல்முனை ஸ்ரீ இராமக்கிருஷ்ண வித்தியாலய அதிபர் காலமானார்

SHARE
(யூவாமி)
கல்முனை ஸ்ரீ இராமக்கிருஷ்ணவித்தியாலய அதிபர் சிவக்கொழுந்து-புவிராஜ் அவர்கள் சுகயீனம் காரணமாக தனது 50வது வயதில் 21ம் திகதி காலமானார்.

மண்டூரைப் பிறப்பிடமாக கொண்ட சிவக்கொழுந்து-புவிராஜ் அதிபர் கடந்த சில நாட்களாக சுகயீனமுற்ற நிலையில் கல்முனை ஏ.எம்.எச் வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று 21ம் திகதி சிகிச்சை பலநின்றி வைத்தியசாலையில் காலமானார். இவர் தனது இளம் வயதில் ஆசிரிய சேவையில் இணைந்து கொண்டு மண்டூர் பிரதேச பல பாடசாலைகளில் ஆசிரியராக கடமைபுரிந்துவந்திருந்தார்.பின்னர் இலங்கை அதிபர் சேவையின் தரம்-2 வது தரத்தில் அனைகட்டியவெளி மற்றும் மண்டூர் ஸ்ரீ இராமக்கிருஷ்ணவித்தியாலயம் கல்முனை ஸ்ரீ இராமக்கிருஷ்ண வித்தியாலம் போன்ற பாடசாலைகளில் இன்றுவரை மாணவர்களின் எதிர்கால கல்வி வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணிந்து வந்திருந்தார்.

இவர் தனது பிறந்த ஊரில் சமூக, ஆன்மீக, கலாச்சார, பொதுப்பணிக்காக தன்னை அர்பணிந்து பலகாலஙங்களாக பணிபுரிந்துவந்தவர். இவர் மூன்று குழந்தைகளின் தந்தை என்பது குறிப்பிடதக்கது. 





SHARE

Author: verified_user

0 Comments: