19 Jan 2015

வறிய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள்

SHARE
மட்டக்களப்பிலுள்ள இராணுவத்தின் 231ஆவது படைத்தலைமையகத்தின் ஏற்பாட்டில் மங்களகம, மற்றும் உறுகாமம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 150 வறிய மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டன.

231ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் பாலித பெர்ணாண்டோவின் ஆலோசனையில் 8ஆவது கெமுனு படைப்பிரிவு இதனை ஏற்பாடு செய்திருந்தது.

காலியைச் சேர்ந்தவரும் பிரிகேடியரின் நண்பருமான றிப்தி பதுர்தீன் என்பவருடைய அனுசரணையில் இந்த பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

மங்களகம வித்தியாலயத்தில் நேற்று (18) நடைபெற்ற இந்த நிகழ்வில், மங்களகம வித்தியாலயத்தைச் சேர்ந்த 100 சிங்கள மாணவர்களுக்கும் உறுகாமம் அ.த.க.பாடசாலையைச் சேர்ந்த 50 முஸ்லிம் மாணவ மாணவிகளுக்கும் பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

நிகழ்வில் 231ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் பாலித பெர்ணாண்டோ, மங்களகம விகாரையின் விகாராதிபதி தெய்கம ஞானரத்ன தேரர், 8ஆவது கெமுனு படைப்பிரிவின் கட்டளை அதிகாரி லெப்டினட் கேர்ணல் சம்பத் ரத்நாயக்க, 231ஆவது பிரிக்கேட்டின் சிவில் இணைப்பதிகாரி மேஜர் அனுர துணுதிலக, மங்களகம வித்தியாலய அதிபர் ஏ.எம்.சுமணரத்ன, அனுசரணையாளரான றிப்தி பதுர்தீன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
SHARE

Author: verified_user

0 Comments: