முன்னாள் அமைச்சரும், ஸ்ரீ.ல.முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளருமான பஷீர்
சேகுதாவூதின் பெயரில் உருவாக்கப்பட்ட கொடும்பாவி ஒன்று நிந்தவூரிலுள்ள சில
முஸ்லிம் காங்கிரஸ் தொண்டர்களால் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, நிந்தவூர்
பிரதான வீதியிலுள்ள கணுவொன்றில் கட்டப்பட்டு எரிக்கப்பட்டது.
கொடும்பாவி எரியும் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் ‘பஷீர் ஒழிக, சமூகத்தைத்
தொடர்ந்து காட்டிக் கொடுக்கும் எட்டப்பரே ஒழிக, அல்லாவுக்கு அடுத்த
இடத்தில் வைக்க வேண்டிய முஹம்மது நபி(ஸல்)அவர்களுக்குரிய இடத்தில் மஹிந்தவை
வைத்துப் பூஜித்த முனாபிக்கே ஒழிக, இத்துரோகியை ஏன் இன்னும் முஸ்லிம்
காங்கிரசில் வைத்துள்ளீர்கள்?, உடன் வெளியேற்றுங்கள்’ என்ற வாசங்களை
உரத்துக் கூவினர். இவ்வாசகங்கள் அடங்கிய சுலோகங்களையும் ஏந்தி நின்றனர்.
இதேவேளை இங்குள்ள கல்விமான்கள் சிலர்; தற்போது நல்லாட்சிக்கான ஒரு சூழல்
ஏற்பட்டு, அமைதியான முறையில் பல முன்மாதிரியான மாற்றங்கள் ஏற்பட்டு வரும்
இவ்வேளையில் இது பொருத்தமற்ற செயலென கண்டனம் தெரிவித்தனர்.(mm)
0 Comments:
Post a Comment