8 Jan 2015

அமைதியான முறையில் வாக்களிப்பு

SHARE
ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் அமைதியான முறையில் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் நடவடிக்கைகளுக்கு அழுத்தங்களை ஏற்படுத்தும் வகையில் எந்தவொரு சம்பவங்களும், வாக்களிப்பு காலங்களில் இடம்பெறவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தேர்தல் நடைபெற்ற சந்தர்ப்பத்தில் அனைத்து பிரதேசங்களுக்கும் உயரிய பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுத்ததாகவும் அஜித் ரோஹன இதன்போது குறிப்பிட்டார்.

இதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கில் தேர்தல் கடமைகளுக்காக இராணுவம் அனுப்பி வைக்கப்படவில்லை, என இங்கு கருத்து வௌியிட்ட இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய குறிப்பிட்டுள்ளார்.

இராணுவத்தினர் அனுப்பட்டதால், வாக்களிப்பு குறையலாம் என முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

நடைபெற்ற தேர்தலின் மூலம் இதனை நன்கு அறிய முடியும் எனவும் ருவன் வணிக சூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.
SHARE

Author: verified_user

0 Comments: