10 Jan 2015

இலங்கையின் புதிய ஜனாதிபதிக்கு சீனா வாழ்த்து

SHARE
இலங்கையின் புதிய ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மைத்திரிபால சிறிசேனவுக்கு சீனா வாழ்த்து தெரிவித்துள்ளது.

மைத்திரிபால சிறிசேனவின் தலைமையின் கீழ் இலங்கை அரசாங்கமும் நாட்டு மக்களும் நாட்டின் அபிவிருத்தியில் புதிய முன்னேற்றத்தை எட்டுவதற்கு வாழ்த்துகிறோம்´ என்று சீனாவின் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஹொங் லேய் கூறியுள்ளார்.

சீனாவும் இலங்கையும் பாரம்பரியமாகவே ஆழமான நட்புறவைக் கொண்டிருக்கின்றன என்றும் கடந்தகால அரசாங்கங்கள் அனைத்தும் சீனாவுடன் நட்புறவான கொள்கையையே கடைப்பிடித்திருக்கின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இரண்டு நாடுகளும் உறுதியான ஒத்துழைப்பை வெளிப்படுத்தி வந்துள்ளதாகவும் சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் கூறுகின்றார்.

இருதரப்புக்கும் நன்மை தரும் விதத்திலும் இருதரப்பு நம்பிக்கை மற்றும் சமத்துவத்தின் அடிப்படையிலும் இருநாட்டு மக்களின் பொதுவான நன்மைகளின் அடிப்படையிலும் சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான செயற்திட்டங்கள் அமைந்துள்ளதாகவும் ஹொங் லேய் தெரிவித்துள்ளார்.

(பிபிசி)
SHARE

Author: verified_user

0 Comments: