ஜனாதிபதியின் கீழ் புதிய பிரதமராக ரணில் பதவியேற்பு-
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 6 ஆவது ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன இன்று (09) பதவியேற்று சத்தியப்பிரமாணம் கொண்டார்.
இப்பதவியேற்பு வைபவம் இன்று மாலை 06
மணியளவில் சுதந்திர சதுக்கத்தில் கோலாகலமான முறையில் இடம்பெற்றமை
குறிப்பிடத்தக்கது, இந்நிகழ்வில் மகாசங்கத்தினர், அமைச்சர்கள் பாராளுமன்ற
உறுப்பினர்கள், முப்படைகள், பொதுமக்கள், உட்பட பெரும் எண்ணிக்கையானோர்
கலந்து கொண்டனர்.
குதிரைப்படையினரின் மரியாதையோடு சுதந்திர சதுக்கத்தினுள் அழைத்து வரப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மலர்மாலை அணிவிக்கப்பட்டு வாத்திய இசைக்கருவிகளின் மரியாதையோடு அழைத்து வரப்பட்டார்.
சுதந்திர சதுக்கத்திலுள்ள புத்தர் சிலைக்கு மலரஞ்சலி செலுத்திய ஜனாதிபதி உயர் நீதியரசர் கே.சிறிபவன் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
மேலும் இவ்வைபத்தின் மற்றுமொரு விசேட அம்சமாக புதிய ஜனாதிபதி முன்னிலையில் இலங்கையின் ஜனநாயக சோசலிச குடியரசின் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
இதன் போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி தன்னை வெற்றிபெறச் செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்ததுடன் தற்போது நாட்டில் நிலவிவரும் அரசியல் கலாசாரத்தை நிலைநிறுத்தி மக்கள் எதிர்பார்க்கும் நல்லதொரு ஆட்சியை அமைப்போம். ஊழல் மோசடிகளை அகற்றி நல்லதொரு ஜனநாயகத்தை நாட்டுமக்கள் அனைவருக்கும் வழங்குவேன் என உறுதியளித்தார்.

0 Comments:
Post a Comment