பாகிஸ்தானில் ஏராளமான தீவிரவாத அமைப்புகள் உள்ளன. அவற்றில் ஜமாத்– உத் –
தவா என்ற அமைப்பு மிகப்பெரியது. இதை ஹபீஷ் முகமது சயீத் நடத்தி வருகிறார்.
இவர் 2008–ம் ஆண்டு மும்பையில் நடந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர். இந்த நிலையில் ஜமாத் – உத்–தவா, ஹக்கானி உள்ளிட்ட 11 தீவிரவாத குழுக்களுக்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது.
இந்த தகவலை பாகிஸ்தான் வெளியுறவுதுறை செய்தி தொடர்பாளர் தஸ்னீம் அஸ்லாம் தெரிவித்தார். ஐ.நா. சபையின் அறிவுறுத்தலின்பேரில் தான் இந்த அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வேறு எந்த காரணமும் இல்லை என தெரிவித்தார்.
ஜமாத் – உத்– தவாவின் தடையை தொடர்ந்து அதன் தலைவர் தீவிரவாதி ஹபீஸ் சயீத் பயணம் செய்வதில் சில நிபந்தனைகளும், கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் பாகிஸ்தானில் அந்த அமைப்பின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.
மும்பை தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இதன் சகோதர அமைப்பான லஸ்கர் – இ–தொய்பா என்ற தீவிரவாத அமைப்பு ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜமாத் – உத்– தவா தலைவர் ஹபீஸ் சயீத் கூறும்போது, இந்தியா வற்புறுத்தலின் பேரில் அமெரிக்கா உத்தரவுபடி எங்கள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் நாங்கள் பாகிஸ்தானில் தொடர்ந்து சமுதாய பணிகளிலும், நலத்திட்டங்கள் வழங்குவதிலும் ஈடுபடுவோம் என்றார். தடை செய்யப்பட்டுள்ள மற்றொரு பெரிய தீவிரவாத இயக்கமான ஹக்கானி ஆப்கானிஸ்தானில் சுகபோகமாக செயல்படுகிறது. இதன் தலைவராக சிராஜ் ஹக்கானி உள்ளார். இவர் சோவியத் எதிர்பாளராக இருந்த ஜலாலுதீன் ஹக்கானியின் மகன் ஆவார்.
இந்த அமைப்புக்கு பாகிஸ்தானில் வங்கி கணக்குகள் இல்லை. இதனால் இதன் வங்கி கணக்குகள் முடக்கப்படவில்லை

0 Comments:
Post a Comment