24 Jan 2015

சவூதிஅரேபியாவின்மன்னர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஸீஸ் இன் மறைவு இலங்கை வாழ் முஸ்லீம்களுக்கு ஒரு பேரிழப்பாகும்

SHARE
சவூதிஅரேபியாவின்மன்னர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஸீஸ் இன் மறைவு இலங்கை வாழ் முஸ்லீம்களுக்கு ஒரு பேரிழப்பாகும் என்றும் அவரதுமறைவால் முஸ்லீம் உலகம் இன்று பாரிய சோகத்தில் ஆழ்ந்திருப்பதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கரஸ்ஸின் பிரதித்தலைவர் அல் ஹாபீஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார் .

அன்னாரின் மறைவு குறித்து அவர் விடுத்துள்ள அனுதாப செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது...

இலங்கை நாட்டுடனும்இ இலங்கை வாழ் முஸ்லீம் மக்களுடனும் மிக நெருக்கமான உறவை கொண்டிருந்த சவூதி மன்னர் இலங்கைக்கு எண்ணிள்ளடங்காத மிகப்பெரிய உதவிகளை செய்து இருக்கின்றார். சவூதி அரேபியாவும் இலங்கையும் மிக நெருக்கமான உறவை பேணுவதற்கு மன்னரின் உள்ளார்ந்த குணநலன்களே பெரிதும் உதவியது.

இலங்கையில் நடைபெற்று வரும் அபிவிருத்தி பணிகளுக்கு சவூதி அரேபியாவின் பனி பாரிய அளவில் அமைந்துள்ளது இந்த வகையில் முஸ்லீல்ம்களின் சமய கலாசார விழுமியங்களை மேம்படுத்துவதற்கு சவூதி அரேபியா வழங்கிய உதவிகள் என்றுமே எம்மால் மறக்க முடியாதவை அன்னாரின் மறைவினால் இன்று இலங்கை வாழ் முஸ்லீம்கள் அனைவரும் தமது குடும்பவாழ் உறவினர் ஒருவரை இழந்து தவிப்பது போன்று சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
 
எல்லாம் வல்ல இறைவன் அன்னாரின்பாவங்களை மன்னித்து மறுமை வாழ்வில் ஈடேற்றம் பெற்று அழகிய சுவனத்தை அடைய எல்லா மக்களும் இருகரம் ஏந்தி இறைவனிடம் பிரத்திக்குமாறு கேட்டுக்கொள் கின்றேன் என அந்த செய்தியில் குறிப்பிடப் பட்டுள்ளது.


SHARE

Author: verified_user

0 Comments: