10 Jan 2015

ஜனாதிபதித் தேர்தல் ஒரே பார்வையில்

SHARE
இலங்கையின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நாடுபூராகவும் நேற்றையதினம் இடம்பெற்றன.

வெளியான தேர்தல் முடிவுகளின் படி, புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன 6,217,162 (51.28%) வாக்குகளைப் பெற்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஷவை விட 449072 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைத் தனதாக்கியுள்ளார்.

இதில் மஹிந்த ராஜபக்ஷ 5,768,090 (47.58%) வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வௌியாகியுள்ள தேர்தல் முடிவுகளின்படி ஒவ்வொரு மாகாணங்களிலும், தேர்தல் மாவட்டங்களின் அடிப்படையில் முக்கிய வேட்பாளர்கள் இருவரும் பெற்றுக் கொண்ட வாக்குகள் பற்றிய விபரங்கள் வருமாறு,

வடமாகாணம்

யாழ் மாவட்டத்தில், மைத்திரிபால சிறிசேன 253,574 (74.42%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 74,454 (21.85%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இதேவேளை தபால்மூல வாக்களிப்பு முடிவுகளின் பிரகாரம், யாழ் மாவட்டத்தில் மைத்திரிபால சிறிசேன 10,885 (69.17%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 4,607 (29.27%) வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

வன்னி மாவட்டத்தில், மைத்திரிபால சிறிசேன 141,417 (78.47%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 34,377 (19.07%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இதேவேளை தபால்மூல வாக்களிப்பின் படி, மைத்திரிபால சிறிசேன 4,750 (61.24%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 2,940 (37.91%) வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

கிழக்கு மாகாணம்

மட்டக்களப்பு மாவட்டத்தில், மைத்திரிபால சிறிசேன 209,422 (81.62%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 41,631 (16.22%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இதேவேளை தபால்மூல வாக்குகளின் படி, மட்டக்களப்பு மாவட்டத்தில் மைத்திரிபால சிறிசேன 6,816 (80.55%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 1,605 (18.97%) வாக்குகளையும் வசப்படுத்தியுள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்தில், மைத்திரிபால சிறிசேன 140,338 (71.84%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 52,111 (26.67%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இதேவேளை தபால்மூல வாக்களிப்பின் படி, மைத்திரிபால சிறிசேன 8,323 (56.94%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 6,207 (42.46%) வாக்குகளையும் பெற்றுள்ளனர் .

திகாமடுல்லை மாவட்டத்தில், மைத்திரிபால சிறிசேன 233,360 (65.22%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 121,027 (33.82%) வாக்குகளையும் வசப்படுத்தியுள்ளதோடு, தபால்மூல வாக்குகளின் படி, மைத்திரிபால சிறிசேன 11,917 (54.89%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 9,713 (44.74%) வாக்குகளையும் தனதாக்கிக் கொண்டுள்ளனர்.

மத்திய மாகாணம்

மாத்தளை மாவட்டத்தில், மைத்திரிபால சிறிசேன 145,928 (47.22%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 158,880 (51.41%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இதேவேளை தபால்மூல வாக்குகளின் படி, மைத்திரிபால சிறிசேன 8,394 (49.60%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 8,483 (50.13%) வாக்குகளையும் வசப்படுத்தியுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில், மைத்திரிபால சிறிசேன 272,605 (63.88%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 145,339 (34.06%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இதேவேளை தபால்மூல வாக்குகளின் படி, மைத்திரிபால சிறிசேன 6,699 (52.37%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 6,057 (47.35%) வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

கண்டி மாவட்டத்தில், மைத்திரிபால சிறிசேன 466,994 (54.56%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 378,585 (44.23%) வாக்குகளையும் வசமாக்கியுள்ளனர்.

தென் மாகாணம்

காலி மாவட்டத்தில், மைத்திரிபால சிறிசேன 293,994 (43.37%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 377,126 (55.64%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இதேவேளை தபால்மூல வாக்குகளின் படி, மைத்திரிபால சிறிசேன 13,879 (46.06%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 16,116 (53.49%) வாக்குகளையும் வசப்படுத்தியுள்ளனர்.

மாத்தறை மாவட்டத்தில், மைத்திரிபால சிறிசேன 212,435 (41.24%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 297,823 (57.81%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளதோடு, தபால்மூல வாக்குகளின் படி, மைத்திரிபால சிறிசேன 10,382 (43.71%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 13,270 (55.87%) வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில், மைத்திரிபால சிறிசேன 138,708 (35.93%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 243,295 (63.02%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இதேவேளை தபால்மூல வாக்குகளின் படி, மைத்திரிபால சிறிசேன 5,620 (35.18%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 10,295 (64.45%) வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

மேல் மாகாணம்

கொழும்பு மாவட்டத்தில், மைத்திரிபால சிறிசேன 725,073 (55.93%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 562,614 (43.40%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இதேவேளை தபால்மூல வாக்குகளின் படி, மைத்திரிபால சிறிசேன 12,160 (48.42%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 12,856 (51.19%) வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

கம்பஹா மாவட்டத்தில், மைத்திரிபால சிறிசேன 669,007 (49.83%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 664,347 (49.49%) வாக்குகளையும் பெற்றுள்ளதோடு, தபால்மூல வாக்குகளின் படி, மைத்திரிபால சிறிசேன 20,386 (49.93%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 20,296 (49.71%) வாக்குகளையும் வசப்படுத்தியுள்ளனர்.

களுத்துறை மாவட்டத்தில், மஹிந்த ராஜபக்ஷ 395,890 (52.65%) வாக்குகளையும், மைத்திரிபால சிறிசேன 349,404 (46.46%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இதேவேளை தபால்மூல வாக்குகளின் படி, மஹிந்த ராஜபக்ஷ 14,830 (53.15%) வாக்குகளையும், மைத்திரிபால சிறிசேன 12,962 (46.46%) வாக்குகளையும், மைத்திரிபால சிறிசேன 12,962 (46.46%) வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

வடமேல் மாகாணம்

குருநாகல் மாவட்டத்தில், மஹிந்த ராஜபக்ஷ 556,868 (53.46%) வாக்குகளையும், மைத்திரிபால சிறிசேன 476,602 (45.76%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இதேவேளை தபால்மூல வாக்குகளின் படி, மைத்திரிபால சிறிசேன 33,384 (51.22%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 31,591 (48.47%) வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

புத்தளம் மாவட்டத்தில், மைத்திரிபால சிறிசேன 202,073 (50.04%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 197,751 (48.97%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.

தபால்மூல வாக்குகளின் படி, மைத்திரிபால சிறிசேன 4,864 (50.58%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 4,721 (49.09%) வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

வடமத்திய மாகாணம்

பொலன்னறுவை மாவட்டத்தில், மைத்திரிபால சிறிசேன 147,974 (57.80%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 105,640 (41.27%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளதோடு, தபால்மூல வாக்குகளின் படி, மைத்திரிபால சிறிசேன 9,480 (68.42%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 4,309 (31.10%) வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

அனுராதபுரம் மாவட்டத்தில், மஹிந்த ராஜபக்ஷ 281,161 (53.59%) வாக்குகளையும், மைத்திரிபால சிறிசேன 238,407 (45.44%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இதேவேளை தபால்மூல வாக்குகளின் படி, மைத்திரிபால சிறிசேன 23,032 (53.72%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 19,643 (45.82%) வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

ஊவா மாகாணம்

பதுளை மாவட்டத்தில், மைத்திரிபால சிறிசேன 249,524 (49.21%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 249,243 (49.15%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இதேவேளை தபால்மூல வாக்குகளின் படி, மைத்திரிபால சிறிசேன 13,031 (49.62%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 13,115 (49.94%) வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

மொனராகலை மாவட்டத்தில், மஹிந்த ராஜபக்ஷ 172,745 (61.45%) வாக்குகளையும் மைத்திரிபால சிறிசேன 105,276 (37.45%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இதேவேளை தபால்மூல வாக்குகளின் படி, மஹிந்த ராஜபக்ஷ 8,281 (52.26%) வாக்குகளையும், மைத்திரிபால சிறிசேன 7,513 (47.41%) வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

சப்ரகமுவ மாகாணம்

இரத்தினபுரி மாவட்டத்தில், மஹிந்த ராஜபக்ஷ 379,053 (55.74%) வாக்குகளையும், மைத்திரிபால சிறிசேன 292,514 (43.01%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இதேவேளை தபால்மூல வாக்குகளின் படி, மஹிந்த ராஜபக்ஷ 11,864 (56.56%) வாக்குகளையும், மைத்திரிபால சிறிசேன 9,053 (43.16%) வாக்குகளையும், பெற்றுள்ளனர்.

கேகாலை மாவட்டத்தில், மஹிந்த ராஜபக்ஷ 278,130 (51.82%) வாக்குகளையும், மைத்திரிபால சிறிசேன 252,533 (47.05%) வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இதேவேளை தபால்மூல வாக்குகளின் படி, மைத்திரிபால சிறிசேன 14,163 (48.43%) வாக்குகளையும், மஹிந்த ராஜபக்ஷ 14,976 (51.21%) வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

இம்முறை தேர்தலில் 15,044,490 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்ததோடு, 15,264,377 (81.52%) பேர் தமது வாக்குகளைப் பதிவு செய்திருந்தனர்.

அவற்றில் செல்லுபடியான வாக்குகள் - 12,123,452 (98.85%)

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 140,925 (1.15%)
SHARE

Author: verified_user

0 Comments: