மட்டக்களப்பு
மாவட்டத்தில் 2004 ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டு
கடந்த பத்து வருடமாக மூடப்பட்டிருந்த மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட
நாவலடி நாமகள் வித்தியாலயத்தின் கல்வி நடவடிக்கைகள் நேற்று (19)
திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டன.
மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர்
சுகுமாரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கிழக்கு மாகாண மேலதிக மாகாண
கல்விப்பணிப்பாளர் எஸ்.மனோகரன், கே.பாஸ்கரன், மண்முனை வடக்கு பிரதேச
செயலாளர் வி.தவராஜா ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டார்.
சுனாமிக்கு பின்னராக காலத்தில் இப்பகுதியை சேர்ந்த மக்கள் மட்டக்களப்பு நகரை அண்டிய பகுதிகளுக்கு இடம்பெயர்ந்த காரணமாக இப்பாடசாலை இயங்கமுடியாத நிலையிருந்தது. எனினும் இப்பகுதி மக்களில் பலர் படிப்படியாக இப்பகுதியில் குடியேறிவருவதன் காரணமாக இப்பிரதேச மாணவர்கள் நீண்ட தூரம் பாடசாலைக்கு செல்லவேண்டிய நிலையேற்பட்டது.
இந்த நிலையில் இது தொடர்பில் மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரனால் கிழக்கு மாகாண கல்வித்திணைக்களத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனைத்தொடர்ந்து இப்பாடசாலைக்கான புதிய கட்டிடம் அமைக்கப்பட்டதுடன் பாடசாலையினை மீள ஆரம்பிப்பதற்கான வேலைகளும் முன்னெடுக்கப்பட்டன. இதன்கீழ் இந்த பாடசாலை ஆரம்பித்துவைக்கப்பட்டதுடன் முதல் கட்டமாக 30 மாணவர்கள் பாடசாலைக்கு இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மாணவர்களின் தொகை அதிகரிக்கும் வரை இப்பாடசாலை கனிஷ்ட பாடசாலையாக செயற்படும் என மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் எஸ்.சுகுமாரன் தெரிவித்தார்.

0 Comments:
Post a Comment