17 Jan 2015

கடுக்காமுனையில் தைப்பொங்கல் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு

SHARE
தைத்திருநாளை சிறப்பிக்கும் முகமாக மட்டக்ளப்பு - கடுக்காமுனை விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில்  கடுக்காமுனை பொது விளையாட்டு மைதானத்தில் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகள் நேற்று(16) வெள்ளிக் கிழமை மிகச்சிறப்பாக இடம்பெற்றது.

விளையாட்டுக்கழக தலைவர் த.கந்தப்போடி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கடுக்காமுனை வாணி வித்தியாலய அதிபர்எஸ். தேவராஜன், ஆசிரியர் மா.ஜீவரெத்தினம், கிராமசேவை உத்தியோகத்தர் சி.ஜீவிதன் மற்றும் கடுக்காமுனை விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் என பலர்  கலந்து சிறப்பித்தனர்.

இதன் போது பாரம்பரிய விளையாட்டுக்களான, வழுக்குமரம் ஏறுதல், தலையணைசமர், மெதுவான சைக்கிள் ஓட்டம், சாக்கோட்டம், ஊசி நூல் கொர்தல், என பல விளையாட்டுக்கள் இடம்பெற்றது.
விiளாயட்டில் ஈடுபட்டு வெற்றிபெற்றவர்களுக்கு பரிசில்களும் இதனபோது வழங்கப்பட்டன.






SHARE

Author: verified_user

0 Comments: