ஐக்கிய தேசியக் கட்சியின் வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.சுவாமிநாதனுக்கு அமைய இருக்கின்ற புதிய அமைச்சரவையில், அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சுப் பதவி வழங்கப்படல் வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் அ.சசிதரன் கூறினார்.
புதிய அரசாங்கத்தில் நியமிக்கப்படவுள்ள அமைச்சர்கள் தொடர்பில் இன்று திங்கட் கிழமை (12) தொடர்பு கொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார்.
ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வன்னி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தி மிக நீண்ட காலமாக செய்ற்பட்டு வரும் டி.எம்.சுவாமிநாதன் ஐக்கிய தேசியஙக் கட்சியின் செயற்குழு உறுப்பினராகவும், இருந்து செயற்பட்டு வருகின்றார்.
இந்நிலையில் அமைக்கப்படவிருக்கின்ற புதிய அமைச்சரவையில் தமிழர்களும் உள்ளவாங்கப்படல் வேண்டும். அதனடிப்படையில் ஐக்கிய தேசிக் கட்சியைப் பிரதி நிதித்துவப் படுத்தும் வன்னி மாவட்ட தேரியப் பட்டடியல் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.சுவாமிநாதனுக்கு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சுப் பதவி வழங்க புதிய ஜனாதிபதியும், பிரதமரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் கூறினார்.
0 Comments:
Post a Comment