1 Jan 2015

கிழக்கு மாகாண அமைச்சர், மாகாண சபைப் பிரதித் தவிசாளர் ஆகியோரின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் விலக்கப்பட்டனர். வாகனங்களும் மீளப்பெறப்பட்டன

SHARE
ஏ.எச்.ஏ.குசைன்

கிழக்கு மாகாண அமைச்சர், மாகாண சபைப் பிரதித் தவிசாளர் ஆகியோரின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் விலக்கப்பட்டனர். வாகனங்களும் மீளப்பெறப்பட்டன

கிழக்கு மாகாண அமைச்சர், மாகாண சபைப் பிரதித் தவிசாளர் ஆகியோரின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் விலக்கப்பட்டனர். வாகனங்களும் மீளப்பெறப்பட்டன.

கிழக்கு மாகாண சபையின் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான நஸீர் அஹமட் இற்கு வழங்கப்பட்டிருந்த மூன்று வாகனங்களும் மூன்று பொலிஸ் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் புதன் கிழமை (31) இரவு முதல் மீளப் பெறப்பட்டுள்ளதாக அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் எம்.ஏ.எம். சரூஜ் தெரிவித்தார்.

இதேவேளை கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் எம்.எஸ்.சுபைரின் மெய்ப் பாதுகாவலர்கள் மூவரும் புதன் கிழமை இரவு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பதற்காக கடந்த வாரம் அரசிலிருந்து விலகிக் கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
SHARE

Author: verified_user

0 Comments: