எதிர்வரும்
ஜனாதிபதித் தேர்தலில் 5 ஆயிரம் விசேட அதிரடிப்படை உட்பட 71,100 பொலிஸார்
கடமைகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்கள் 6 ஆம் திகதி முதல் தேர்தல்
கடமையில் ஈடுபட இருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ்
அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தலா மூன்று
பொலிஸார் வீதம் கடமையில் ஈடுபடுத்தப்பட இருப்பதாக கூறிய அவர், அவசர
சந்தர்ப்பத்தில் பயன் படுத்துவதற்காக சகல பொலிஸ் பிரிவிலும் விசேட
கலகமடக்கும் படையினர், தயார் நிலையில் வைக்கப்படுவர் எனவும் அவர்
குறிப்பிட்டார்.
ஜனாதிபதி தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விளக்கமளிக்கும் விசேட ஊடகவியலாளர் மாநாடு நேற்று பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்றது.
இங்கு கருத்துத் தெரிவித்த அவர், 66,100 பொலிஸாரும் 5000 அதிரடிப் படையினரும் தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்படுவர்.அண்மைக்காலத்தில் தேர்தலில் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்ட கூடுதல் தொகை இதுவாகும். நாடுமுழுவதிலும் உள்ள 12,252 வாக்களிப்பு நிலையங்களுக்கும் ஆயுதம் தாங்கிய தலா 2 கொன்ஸ்டபிள்கள் உட்பட மூவர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படுவர்.
49 வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு வெளியிலும், விசேட அதிரடிப்படையினர் கடமையில் நிறுத்தப்படுவர்.இது தவிர 5ஆம் திகதி முதல் நாடு முழுவதிலும் 417 வீதி சோதனை சாவடிகள் அமைக்கப்படும். 55 முழுமையான கலகமடக்கும் பொலிஸ் பிரிவுகளும் 97 பாதி கலகமடக்கும் பிரிவுகளும் கடமையில் ஈடுபடுத்தப்படும்.
நாடுமுழுவதிலுமுள்ள 443 பொலிஸ் நிலையங்களுக்கும் என உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பதவிக்கு மேற்பட்ட பதவி வகிக்கும் அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார். தேர்தல் முடிவடைந்த ஒருவாரம் வரை பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படுவர்.
43 பொலிஸ் பிரிவுகளிலும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் கீழ் விசேட அதிரடிப்படையினர் தயார் நிலையில் வைக்கப்படுவர்.தேர்தல் பிரசார பணிகள் 5 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணியுடன் முடிவடைவதால் அதன் பின்னர் பிரசாரங்கள் மேற்கொள்வது முற்றாக தடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
68 ஆயிரம் பொலிஸார் 6ஆம் திகதி முதல் கடமைகளில் ஈடுபடுத்தப்படுவர். 5ஆம் திகதிக்குப் பின்னர் ஊர்வலங்கள், வாகன பேரணி என்பன தடை செய்யப்பட்டுள்ளதோடு இதனை மீறுவோருக்கு எதிராக வழக்குத் தொடரப்படும்.
இதேவேளை வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட நவம்பர் 20 முதல் இன்று வரை தேர்தல் சட்டத்தை மீறும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் மேல் மாகாணத்தில் 63 சம்பவங்களும், வடமத்திய மாகாணத்தில் 32 சம்ப வங்களும்இ கிழக்கில் 21 சம்பவங்களும் பதிவாகியுள்ளன. இந்த சம்பவங்கள் தொடர்பில் 14 அரசியல் வாதிகள் உட்பட 112 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இவர்களிடையே 3
உள்ளூராட்சி சபை தலைவர்கள், 7 பிரதேச சபை உறுப்பினர்கள், ஒரு மாகாண சபை
உறுப்பினர், ஒரு பிரதி அமைச்சர் கைதாகியுள்ளார்.ஆளும் தரப்பு எதிர் தரப்பு
என்ற வித்தியாசமின்றி சட்டத்தை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் சட்டத்தை மீறுவோருக்கு எதிராக தராதரம் பாராது நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.தேர்தல் சட்டத்தை முறையாக கடைப்பிடிக்குமாறு பிரதேச அரசியல்வாதிகள், வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களை கோருகிறோம் எனவும் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

0 Comments:
Post a Comment