31 Jan 2015

மகாத்மா காந்தியின் 67வது நினைவு தினம்

SHARE
மகாத்மா காந்தியின் 67வது நினைவு தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு காந்த சேவாக சங்கத்தின் ஏற்பாட்டில் நிகழ்வு ஒன்று நடைபெற்றது.

மட்டக்களப்பு நகரில் உள்ள காந்தி சிலையருகில் மட்டக்களப்பு காந்த சேவாக சங்கத்தின் தலைவர் அ.செல்வேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான இரா.துரைரெட்னம், ஞா.கிருஸ்ணபிள்ளை, மா.நடராஜா, பிரசன்னா இந்திரகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது காந்தி சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் காந்த சேவா சங்கத்தின் உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
SHARE

Author: verified_user

0 Comments: