67ஆவது
சுதந்திர தினஇவ்வாண்டு பெப்ரவரி 4 ஆம் திகதி நடைபெறவுள்ள 67ஆவது சுதந்திர
தின விழா கொண்டாட்டம் ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை பாராளுமன்ற மைதானத்தில்
நடத்த உள்விவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
அம்பாந்தோட்டை வீரகெட்டிய பிரேதசத்தில்
நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கொண்டாட்டமே தற்போது பாராளுமன்ற
மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
வீரகெட்டியவில் நடத்துவதற்கு அதிக செலவு
ஏற்படும் என்ற காரணத்தினால் குறைந்த செலவில் நடத்தும் நோக்கிலேயே
அக்கொண்டாட்டம் பாராளுமன்ற மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு பெப்ரவரி 3ஆம் திகதி இரவு சுதந்திரச் சதுக்கத்தில் சமய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
மாவட்ட ரீதியாக சுதந்திரதின கொண்டாட்டங்களை முன்னெடுக்க மாவட்டச் செயலாளர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர் என உள்விவகார அமைச்சின் மேலதிக செயலாளர் டப்ளியு.எம். தீப்தி பெர்ணாண்டோ தெரிவித்தார்.
மாவட்ட ரீதியாக சுதந்திரதின கொண்டாட்டங்களை முன்னெடுக்க மாவட்டச் செயலாளர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர் என உள்விவகார அமைச்சின் மேலதிக செயலாளர் டப்ளியு.எம். தீப்தி பெர்ணாண்டோ தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment