ஏர் ஏசியா விமானத்தின் பணிப்பெண் தனது காதலருக்கு 'நான் உன்னை 38,000
அடி உயரத்தில் இருந்து காதலிக்கிறேன்' என்று குறுஞ்செய்தி ஒன்றை
அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏர்ஏசியா விமானத்தில் பணியாற்றிய நிஷா (22) கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னதாக தன் கடைசி சமூக வலைதளப் பதவை பதிவேற்றியுள்ளார்.
நிஷா இந்த புகைப்பட தகவலை இன்ஸ்டாகிராமில் அனுப்பியுள்ளார். இதில் 'நான்
உங்களை 38,000 அடி உயரத்தில் இருந்து காதலிக்கிறேன்' என எழுதி, கேபின்
ஜன்னலில் வைத்து புகைப்படம் எடுத்துள்ளார்.
ஆனால் எந்த விமானத்தில் வைத்து இந்த புகைப்படத்தை எடுத்தார் என்பது
தெளிவாகவில்லை. இது அவரது காதலர் தியோவிற்கு அனுப்பட்டுள்ளது என
தெரியவந்துள்ளது.
இந்நிலையில் விமானம் விபத்துக்கள் சிக்கிய பகுதியில் இருந்து, நேற்று
மீட்கப்பட்ட உடல்களுடன் விமான பணிப்பெணின் உடலும் மீட்கப்பட்டுள்ளது.
மேலும் நிஷாவின் மரணம் அவரது காதலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.
0 Comments:
Post a Comment