3 Jan 2015

221 ஓட்டங்களுக்குள் சுருண்டது நியூசிலாந்து

SHARE
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 221 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் நியூசிலாந்து சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது.

அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு இலங்கை அணி கிரிக்கெட் சுற்றுப் பயணம் செய்துள்ளது.

இதில் முதலாவதாக நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஏழு ஒருநாள் போட்டிகள் அடங்கிய தொடர் இடம்பெறுகின்றது.

முன்னதாக இடம்பெற்ற முதலாவது டெஸ்டில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுக்களால் அபார வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இன்று வெலிங்டனில் ஆரம்பமானது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி துடுப்புடன் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு கேன் வில்லியம்சன் அதிகபட்சமாக 69 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

மேலும் மற்றைய வீரர்கள் எவரும் அரைச்சதம் கூட கடக்காத நிலையில் வரிசையாக வௌியேற முதலாம் நாளான இன்று அந்த அணி 221 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்துள்ளது.

இலங்கை சார்பில் அபாரமாக பந்துவீசிய நுவன் பிரதீப் 4 விக்கெட்டுக்களை சாய்த்தார்.

மேலும் சுரங்க லக்மால் 3 விக்கெட்டுக்களையும் தம்மிக்க பிரசாத் 2 விக்கெட்டுக்களையும் மெத்தியூஸ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து இலங்கை தற்போது தனது முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடி வருகின்றது.
SHARE

Author: verified_user

0 Comments: