சீனாவின்
யங்கட்ஸ் நதியில் வெள்ளோட்டத்தின்போது படகு கவிழ்ந்ததில் அதில் பயணம்
செய்த இந்தியர் உட்பட 22 பேர் நீரில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிந்துள்ளனர்.
சீனாவின் மிகப்பெரிய நதி யங்கட்ஸ்,
கிழக்கு மாகாணம் ஜியான்ஸுவில் பாய்ந்தோடும் இந்த நதியில் கடந்த
வியாழக்கிழமை 15 ஆம் திகதி படகொன்று வெள்ளோட்டம் விடப்பட்டது. அதில்
இந்தியர் ஒருவர் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 25 பேர் இருந்தனர்.
அடுத்த சில விநாடிகளில் படகு கவிழ்ந்தது. இதில் படகில் இருந்தவர்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். தண்ணீரில் தத்தளித்த 3 பேர் மீட்கப்பட்டனர். மற்றவர்களைத் தேடும் பணி தொடர்ந்தது. ஆனால் இந்தியர் உட்பட 22 பேரும் இறந்து விட்டனர் என்று நேற்று (17) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இறந்தவர்களில் 4 பேர் சிங்கப்பூரை சேர்ந்தவர்கள். இந்தோனேசியா, மலேசியா, ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவரும் இந்த விபத்தில் பலியாகி உள்ளனர். மற்றய அனைவரும் சீனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments:
Post a Comment