31 Jan 2015

2016 ஆம் ஆண்டுக்கான T-20 உலகக்கிண்ணப் போட்டி இம்முறை இந்தியாவில்!

SHARE
2016 ஆம் ஆண்டுக்கான T-20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் எதிர்வரும் மார்ச் மாதம் 11 ஆம் திகதி ஆரம்பமாகி  ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதி வரை இந்தியாவில் நடைபெறுகிறது.  (29) துபாயில் இடம்பெற்ற ஐசிசி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட திகதிளுக்கு ஒப்புதல்  அளிக்கப்பட்டது.

அதே போல் 2017 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் இங்கிலாந்தில் ஜூன் 1 முதல் 19ஆம் திகதி வரை நடைபெறும். 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டிகளும் இங்கிலாந்தில் மே மாதம் 30 ஆம் திகதி முதல் ஜூன் 15 ஆம் திகதி வரை நடைபெறுகிறது.

2017 ஆம் ஆண்டு மகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பை இங்கிலாந்தில் ஆகஸ்ட் 4 - 27 ஆகிய திகதிகளுக்கிடையே நடைபெறுகிறது. அதேபோல் 2018 ஆம் ஆண்டு மகளிர் உலக T-20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் மேற்கிந்திய தீவுகளில் நவம்பர் 2  ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது என த கிண்டு பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது.
SHARE

Author: verified_user

0 Comments: