19 Jan 2015

2014 ஆம் ஆண்டு பூமியின் அதிக வெப்பமான நாடு

SHARE
உலகம் முழுவதும் மக்கள் நிலத்தடி எரிபொருட்களைப் பயன்படுத்தி கிரீன்ஹவுஸ் வாயுக்களை காற்றில் கலக்கச் செய்து சுற்றுச்சூழலை பாதிப்படையச் செய்ததால் 2014 ஆம் ஆண்டு பூமியின் அதிகமான வெப்பமடைந்த ஆண்டாக அமெரிக்க அரசின் இரு அறிவியல் அமைப்புகள் கூறியுள்ளன.

இதுகுறித்து நாஸா விண்வெளி ஆய்வுக்கழகம் மற்றும் தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (National Oceanic and Atmospheric Administration (NOAA) ) நடத்திய ஆய்வின் அடிப்படையில் தட்பவெப்ப சூழ்நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதைக் குறிப்பிட்டு உலக அளவில் பசுமை இல்ல வாயுக்களினால் ஏற்படுத்தும் மாசுக் கட்டுப்பாட்டை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெள்ளை மாளிகை கூறியுள்ளது.

19ஆம் நூற்றாண்டு முழுவதும் 1997 லிருந்து 10 வருடங்கள் மிகவும் வெப்பமாக வருடங்களாக இருந்தன என்பதை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 2010 க்கு மேல் உலக வெப்பமயமாதல் குறித்த சில சந்தேகங்கள் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் கூற்றுகள் சமீப வருடங்களாக நிறுத்தப்பட்டன. 2014ல் வெப்பநிலை, ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகள் உள்ளிட்டு வடக்கு ஆப்பிரிக்கா, மேற்கு அமெரிக்க ஐக்கிய நாடுகள் வரை நீண்டிருந்தது.

மேற்கு அலாஸ்கா தீவுகளிலிருந்து ரஷ்யாவின் கிழக்கு வரை தென்அமெரிக்காவின் உள்ளார்ந்த பகுதிகளிலும் கிழக்கு மற்றும் மேற்கு கடலோர ஆஸ்திரேலியா மற்றும் ஆஸ்திரேலியாவின் இன்னும் சில இடங்களிலும் உலகம் முழுவதும் பதிவானதாக நாசாவும் நோயாவும் தெரிவித்துள்ளன.

குழப்பமான வானிலை நிலைமைகளால் வருடத்திற்கு வரும் பாதிப்படையும் புவிவெப்பமாதலுககான காரண கர்த்தாக்களால் மனிதர்களால் உருவாக்கப்படும் கிரீன்ஹவுஸ் வாயுக்களால் உருவாக்கப்படும் மாசு, மிகப்பெரும் இடர்களை பூமிக்கு ஏற்படுத்திவருவதாக நியூயார்க்கில் உள்ள நாசாவின் கோடார்ட் விண்வெளி ஆய்வுக் கழக இயக்குநர் காவின் ஸ்மித் தெரிவித்தார்.
SHARE

Author: verified_user

0 Comments: