2014
ஆம் ஆண்டு இணையத் தளத்தில் உலகம் முழுதும் அதிகம் உபயோகிக்கப் பட்ட
சொற்கள் மற்றும் வார்த்தைகளின் பட்டியலை பூகோள மொழியியல் கண்காணிப்பு
அமைப்பு வெளியிட்டுள்ளது.
இதில்
மிக அதிக தடவை பாவிக்கப் பட்ட சொல்லாக நிச்சயமாக ஓர் சொல் இடம் பெறவில்லை.
அதாவது அன்பைக் குறிக்கும் 'எமோஜி' எனும் இதயக் குறியீடே முதலிடம்
பிடித்துள்ளது.
இந்த இதயக் குறியீடு 2014 இல் இணையத்தில் இவ்வுலகில் அதிகம் உபயோகிக்கப்
பட்ட எபோலா, ஹாஷ்டாக் ஆகியவற்றையும் பின்னுக்குத் தள்ளி விட்டுள்ளதுடன்
பிளாக்கர்கள், டுவிட்டர், ஃபேஸ்புக் மட்டுமன்றி சுமார் 250 000 உலகளாவிய
செய்தி ஊடகங்களிலும் பரவலாக உபயோகிக்கப் பட்டுள்ளது. இணையத் தளத்தில்
அன்பைக் குறிக்கும் எமோஜி குறியீட்டுடன் சேர்த்து உணர்வு, வெளிப்பாடு
மற்றும் மனம், நபர், இடம் அல்லது பொருள் பற்றிய நிலைகளைக் குறிப்பிடும்
சுமார் 722 குறியீடுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 2015 இல்
இன்னமும் 250 குறியீடுகள் இதில் சேர்க்கப் படவுள்ளன. இந்நிலையில் அன்பைக்
குறிக்கும் எமோஜி உலகம் முழுதும் ஒரு நாளில் பில்லியன் தடவைகள் உபயோகிக்கப்
படுவதாகக் கணிக்கப் பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை சமீபத்தில் அமெரிக்காவில் ஃபெர்குசனில் போலிசாரால் சுடப்பட்ட
மைக்கேல் பிரவுன் போன்ற கருப்பின இளைஞர்கள் கொல்லப் பட்ட சம்பவங்களை
அடுத்து 2014 இல் இணையத் தளத்தில் அதிகத் தடவை உபயோகிக்கப் பட்ட
வார்த்தைகளாக 'Hands up, don't shoot என்பன இடம் பிடித்துள்ளன.
2014 ஆம் ஆண்டு இணையத்தில் அதிகம் பாவிக்கப் பட்ட சொற்கள் மற்றும் வார்த்தைகள் குறித்த பட்டியல் கீழே:
0 Comments:
Post a Comment