15 Jan 2015

பாப்பரசரின் வருகையால் மட்டு. சிறையில் 13 கைதிகள் விடுதலை

SHARE
பரிசுத்த பாப்பரசரரின் இலங்கைக்கான வருகையை முன்னிட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 15 சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

இன்று (14) காலை சிறைச்சாலை அத்தியட்சகர் எம்.டி.பிரியங்கர தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

சிறுகுற்றங்களைப் புரிந்தோர், தண்டப்பணம் செலுத்த முடியாதோர் இவ்வாறு விடுதலை செய்யப்பட்டதாக சிறைச்சாலை நிர்வாகம் தெரிவித்தது.

சிறைச்சாலையின் பிரதம ஜெயிலர் கே.மோகனதாஸ் உட்பட பல முக்கியஸ்தர்கள் பங்கு கொண்டனர். இதன்போது பிரார்த்தனை நிகழ்வும் இடம்பெற்றது.
SHARE

Author: verified_user

0 Comments: