4 Jan 2015

டெஸ்ட் போட்டிகளில் 12,000 ஓட்டங்களை பெற்று சங்கா சாதனை

SHARE
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் மிக விரைவாக 12,000 ஓட்டங்கள் கடந்த வீரர் என்ற சாதனையை இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார, தனதாக்கிக் கொண்டார்.

இலங்கை - நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் ஆரம்பமாகியது. இப்போட்டியில் 5 ஓட்டங்களைக் கடந்தால் 12,000 ஓட்டங்கள் என்ற நிலையில் துடுப்பெடுத்தாடிய சங்கக்கார, இலகுவாக தனது இலக்கினை அடைந்து சாதனை படைத்தார்.

இவருக்கு முன்னதாக சச்சின் டெண்டுல்கர் மற்றும் ரிக்கி பொன்டிங் ஆகியோர் 247 இனிங்ஸ்களில் விளையாடியே 12,000 ஓட்டங்களைக் கடந்திருந்தனர். ஆனால், சங்கக்கார இந்த சாதனையினை 124 இனிங்ஸ்களில் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம், சச்சின், பொன்டிங் ஆகியோரின் சாதனையை சங்கா முறியடித்தார். தனது 130 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் சங்கக்கார, 124 ஆவது இனிங்ஸில் 33 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காமல் களத்திலுள்ளார்.

இதன்மூலம், 12,028 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். டெஸ்ட் வரலாற்றில், 37 சதங்கள், 51 அரைச்சதங்களை குவித்துள்ளார் சங்கா. டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்களைக் குவித்தவர்கள் வரிசையில், உலகில் 5ஆவது இடத்தில் சங்கா இருப்பதும் குறிப்பிடத்தக்கது.(nl)
SHARE

Author: verified_user

0 Comments: