23 Jan 2015

108 ஓட்டங்களால் வீழ்ந்தது இலங்கை

SHARE
இலங்கைக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணி 108 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியுள்ளது.

நியூஸிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இலங்கை அணி, முன்னதாக இரண்டு டெஸ்ட் மற்றும் ஏழு ஒரு நாள் போட்டிகளில் நியூஸிலாந்தை எதிர்கொள்கின்றது.

இதில் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ள நியூஸிலாந்து, நடைபெற்று முடிந்துள்ள நான்கு ஒருநாள் போட்டிகளில் ஒன்று கைவிடப்பட்ட நிலையில் இரண்டில் வெற்றி பெற்று 2-1 என முன்னிலையில் உள்ளது.

இந்தநிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான ஐந்தாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது.

இதில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய நியூஸிலாந்து சார்பில் லூக் ரொஞ்சி 170 ஓட்டங்களையும் கிராண்ட் எலியட் 104 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காது விளாசினர்.

50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்த அந்த அணி 360 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இதனையடுத்து 361 என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சார்பில் அபாரமாக ஆடிய டில்ஷான் சதமடித்து (116) அசத்தினார்.

எனினும் 43.4 ஓவர்களிலேயே சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்த இலங்கை 252 ஓட்டங்களை மட்டுமே பெற்று தோல்வியைத் தழுவியது.

இதன்படி ஏழு போட்டிகள் கொண்ட தொடரில் ஒரு போட்டி கைவிடப்பட்ட நிலையில் 3-1 என நியூஸிலாந்து முன்னிலையில் உள்ளது.
SHARE

Author: verified_user

0 Comments: