7வது ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு நடந்து முடிந்துள்ள நிலையில் முதலாவது
தேர்தல் முடிவை இரவு 10 மணிக்கு பின்னர் வெளியிட முடியும் என தேர்தல்கள்
ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
அது தபால் மூல முடிவாக அமையும் என்றும் ஏனைய வாக்களிப்பு முடிவுகள் 12 மணிக்குப் பின்னர் வெளியிடப்படும் என்றும் இறுதி முடிவு வெளியாவது எப்போது என்று கூற முடியாதென்றும் இறுதி முடிவு வெளிவர நாளை மாலையாகலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் செயலகத்தில் சற்று நேரத்திற்கு முன்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
´இன்று காலை 7 மணி தொடக்கம் மாலை 4 மணிவரை வாக்கெடுப்பு நடவடிக்கைகள் பெரிய அசம்பாவிதங்கள் எதுவும் இன்றி நிறைவுபெற்றுள்ளன. தேர்தல் காலத்தில் மக்கள் கூட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டமை கவலை அளிக்கிறது. பலியான நபரின் குடும்பங்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். இனி இவ்வாறு நடைபெறாமல் தவிர்ப்பது நன்று.
தேர்தல் முடிவு வெளிவரும் போது தயவு செய்து வன்முறையில் ஈடுபட வேண்டாம். தேர்தல் கடமையில் ஈடுபட்ட உத்தியோகத்தர்கள், பொலிஸார், ஊடகவியலாளர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. தேசிய முறைப்பாட்டு மத்திய நிலையத்திற்கு இன்று மாலை 5 மணிவரை 328 முறைப்பாடுகள் கிடைத்தன. அவற்றில் பாரிய முறைப்பாடுகள் எதுவும் இருக்கவில்லை.
ஆனால் வாக்களிப்பு நிலையங்களில் பென்சில் பாவனை, வாக்காளர்களை வாகனங்களில் ஏற்றிச் செல்லல், குறித்த நபருக்கு வாக்கு அளிக்கச் சொல்லுதல் போன்றன தொடர்பிலான முறைப்பாடுகளே கிடைக்கப்பெற்றன. மேலும் வாக்குப் பெட்டி எடுத்துச் செல்லப்படும் போது மாற்றப்படும் அல்லது வாக்குச்சீட்டு களவாகத் திணிக்கப்படும் என்றெல்லாம் முன்வைக்கப்பட்டும் குற்றச்சாட்டுக்களில் உண்மை இல்லை. அவை பொய் பிரச்சாரங்கள்.
வாக்கெண்ணும் நடவடிக்கையை கைவிடும் தேவை இல்லை. தேர்தல் செயலகத்தை எஸ்ரிஎப் சூழ்ந்துள்ளதாக வெளியாகும் செய்தியில் உண்மை இல்லை. தேர்தல் செயலகம் பாதுகாப்பாகவே உள்ளது´ என தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்தார்.(ad)

0 Comments:
Post a Comment