26 Dec 2014

மட்டக்களப்பில் தொடர்கிறது அடை மழை தூர இடங்களுக்கான போக்குவரத்துக்கள் நிறுத்தப்பட்டுள்ளது.

SHARE
 மட்டக்களப்பு மாவட்டதில் தொடர்ந்த பெய்து வந்த அடை மழை வியாழக்கிழமை பகல் மழுவதும், ஓய்ந்திருந்தது. ஆனாலும் வியாழக் கிழமை மாலைவேளையிலிருந்து வெள்ளிக்கிழமை (26) வரைக்கும் தொடர்ந்து விடாது பெய்த வண்ணமேயுள்ளது. இதனால் பல வீதிகளின்போக்கு வரத்துக்கள் தடைப்பட்டுள்ளன.

அந்த வகையில் மட்டக்களப்பிலிருந்து கொழும்பு, கண்டி போன்ற தூர இடங்களுக்கச் செல்லும், பிரதான வீதியின் மன்னப்பிட்டி வீதியினை ஊடறுத்து வெள்ள நீர் பாய்வதனால் அப்பகுதிக்கான போக்குவரத்துக்கள் தடப்பட்டுள்ளன.

இந்நிலையில் மண்டூர் -வெல்லாவெளி வீதி, பெரியபோரதீவு- பழுகாமம் வீதி,   நவகிரி – வெல்லாவெளி வீதி, மற்றும் மகிழடித்தீவு-பண்டாரியாவெளி ஆகிய உளுர் வீதிகளை ஊடறுத்தும் வெள்ள நீர் பாய்வதனால் அவ்வீதிகளினுடனான போக்குவரத்துக்களும் முற்றாகத் தடைப்பட்டுள்ளன.

இந்நிலையில் மட்டக்களப்பிலிருந்து யாழ்ப்பாணம், மன்னார், திருகோணமலை, பாணந்துறை, பதுளை, கொழும்பு, கண்டி, அம்பாறை, மங்களகம, போன்ற தூர இடங்களுக்கான போக்குவரத்துக்கள் இன்று வெள்ளிக்கிழமையிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் மட்டக்களப்பு சாலை முகாமையாளர் ரி.மனோகரன் தெரிவித்தார்.  

மட்டக்களப்பு மாவட்டத்தில் வியாழக்கிழமை (25) காலை 8.30 மணியிலிருந்து வெள்ளிக்கிழமை (26) காலை 8.30 மணிவரையான 24 மணித்தியாலங்களில் மட்டக்களப்பில் 123.6 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், நவகிரியில் 125.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், தும்பங்கேணியில் 131.4 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும்,  ஆகக் கூடியதாக பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு மவாட்ட வானிவை அவதான நிலையத்தின் பொறுப்பதிகாரி கே.சூரியகுமாரன் தெரிவிதார்

தெடர்ச்சியாக அடைமழை பெய்து வருகின்ற இந்நிலையில்
மட்டக்களப்பு மாவட்திலுள்ள உன்னிச்சைக் குளம் 32 அடி 8 இஞ்சி, வாகனேரிக்குளம் 20 அடி 7 இஞ்சி, தும்பங்கேணிக்குளம் 17 அடி 9 இஞ்சி, கித்துள்வௌக்குளம் 10 அடி 11 இஞ்சி, கட்டுமுறிவுக்குளம் 12 அடி 4 இஞ்சி,  உறுகாமம் குளம் 17 அடி 5 இஞ்சி, நவகிரிக்குளம் 33.அடி 7 இஞ்சி, வெலிக்காக் கண்டிக்குளம் 16 அடி 10 இஞ்சியும், வடமுனைக்குளம் 13 அடி 9 இஞ்சி, நீர் மட்டம் உள்ளதாக அந்தக் குளங்களுக்குப் பெறுப்பான நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள் அறிவித்துள்ளனர்.














SHARE

Author: verified_user

0 Comments: