28 Dec 2014

மு.காவின் முடிவை வரவேற்று கிழக்கில் மக்கள் ஆரவாரம்

SHARE
அரசிலிருந்து வெளியேறி பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு மு.கா. ஆதரவு வழங்கும் என கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் இன்று அறிவித்ததை அடுத்து, கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் வீதிகளில் கூடி பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சி ஆரவாரம் செய்துவருகின்றனர். 
முஸ்லிம் மக்கள் பெரும்பாலானோர் மைத்திரியை ஆதரிக்கவே திட்டமிட்டுள்ளனர் என்று முன்னர் தகவல் வெளியாகியிருந்தது. எனினும் கட்சித் தலைமை முடிவை அறிவிக்கத் தாமதமானதால் மக்கள் அமைதியாக காத்து வந்தனா். 
இந்நிலையில் இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் பொது எதிரணி வேட்பாளரை ஆதரிப்பது என்று கட்சித் தலைவர் ஹக்கீம் அறிவித்ததை வரவேற்றுள்ள முஸ்லிம் மக்கள், பட்டாசு கொளுத்தி கொண்டாடி வருகின்றனர். 

 

SHARE

Author: verified_user

0 Comments: