மான்கராத்தே படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன்-துரை செந்தில்குமார்
இருவரும் இணைந்திருக்கும் படம் ‘காக்கிசட்டை’. இப்படத்தில்
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்துள்ளார்.
அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ்
நிறுவனமும், எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்துவிட்ட நிலையில்,
ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி
ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
இந்நிலையில், இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்திருந்தனர். இப்போது படம் பொங்கலுக்கு வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஏனெனில், பொங்கல் ரேசில் அஜீத்தின் ‘என்னை அறிந்தால்’ படமும், விக்ரமின்
‘ஐ’ படமும், விஷாலின் ‘ஆம்பள’ படமும் வெளியாவதால், இந்த படங்களே நிறைய
தியேட்டர்களை ஆக்கிரமித்து கொள்ளும். எனவே, ‘காக்கி சட்டை’ படத்துக்கு
குறைந்த அளவு தியேட்டர்களே கிடைக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஆகையால், பொங்கல் ரேசில் படத்தை களமிறக்க படக்குழுவினருக்கு சற்று
தயக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், பொங்கல் ரேசில் ‘காக்கி
சட்டை’ களமிறங்குவது சந்தேகமே என்கிறது கோலிவுட் வட்டாரம்.
0 Comments:
Post a Comment