இயற்கையின் தாண்டவத்தால் பாதிப்புற்றுள்ள ஏழை மக்களின் அன்றாட வாழ்வியலை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துவதை எமது கட்சி ஒருபோதும் விரும்புவதில்லை. தற்போது மக்களுக்கு உடனடியாக எது தேவைப்படுகின்றதோ அதை பெற்றுக்கொடுக்கவே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா செயற்பட்டு வருகின்றார் – என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சரின் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பாளருமாகிய கே.வி.குகேந்திரன் (வி.கே.ஜெகன்) தெரிவித்துள்ளார்.
கன மழையால் பாதிப்புற்றுள்ள வலி வடக்கு பகுதி மக்களையும் அப்பிரதேச நிலவரங்களையும் நேரில் சென்று பார்வையிட்ட யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வி.கே.ஜெகன் அந்த மக்களது தேவைகளை கேட்டறிந்தபின்னர் மக்களுடன் உரையாடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில் –
உங்களது பிரச்சினைகள் அனைத்தும் அமைச்சரது பார்வைக்கு கொண்டு சென்று உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான செயற்பாடுகளை மேற்கொண்டு தருகின்றேன். உங்களது நிலைமைகளையும் இருப்பிடங்களை பார்க்கும்போது வேதனையாக உள்ளது. இயற்கையின் பிடியில் தற்போது நாங்கள் சிக்கியுள்ளோம். இது தற்காலிகமான ஒரு நிலைமைதான். உங்களது எதிர்பார்ப்புக்கள் அனைத்தையும் அமைச்சர் பெற்றுத்தருவார் -
தொடரும் கனமழை காரணமாக யாழ்.குடாநாடெங்கும் வெள்ளக்காடாய் காட்சியளிக்கிறது. வறியமக்கள் தமது வழ்வாதாரத்தை இழந்து தத்தளித்துக்கொண்டிருக்கின்றனர்.
கடந்த சில நாள்களாக தொடர்ந்து பெய்துவரும் கன மழை காரணமாக குடா நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகின்றது. நாளாந்த வேலைசெய்து குடும்ப வாழ்வை நடத்திவரும் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் இடம்பெயர்ந்து பாடசாலைகளிலும் பொது இடங்களிலும் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.
மக்களது தேவைகளை அறிந்து அவர்களுக்குத் தேவையான உதவிகளை மேற்கொண்டு கொடுக்கும் முயற்சிகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பணிப்பிற்கமைய குடாநாட்டின் அனைத்து பகுதிகளிலும் உதவிப்பணிகளை அப்பகுதிகளின் அமைப்பாளர்களூடாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன..
0 Comments:
Post a Comment