24 Dec 2014

அரச அதிகாரங்களை அரசியலில் இணைத்து பேசுவதனை ஊடகங்கள் தவிர்த்துக்கொள்ளல் வேண்டும் -மட்டு அரச அதிபர் பி.எஸ்.எம்.சாள்ஸ்

SHARE
மட்டக்களப்பு மாவட்ட மக்கள் என்றும் இல்லாதவாறு வெள்ளப் பெருக்கில் தவிர்த்துக்கொண்டிருக்கும் தறுவாயில் அவர்களை காப்பாற்றுவதிலும், அவர்களுக்கான உணவு மற்றும் இருப்பிடத்திற்கான ஏற்பாடுகளை செய்வதிலும் 24 மணித்தியாலம் செலவழித்துக் கொண்டிருக்கின்றோம்.
அத்தோடு கிராமத்துக்குள் வெள்ளம் புகுவதனால் அயல் கிராமங்களிடையில் பிரச்சனை ஏற்படுகின்ற போது உரிய இடத்திற்குச் சென்று அதனை தீர்ப்பதில் மும்முரமாக செயற்பட்டுக்கொண்டிருக்கிறோம்.

என மட்டக்கபபு மாவட்ட அரச அதிபர் திருமதி.பி.எஸ்.எம்.சாள்ஸ்  இன்று பதன் கிழமை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது…

எமது மாவட்டத்திலுள்ள விவசாயிகளுக்கான பாரிய நிதி செலவீட்டுடன் புனரமைக்கப்பட்ட பாரிய, சிறிய குளங்கள் இந்த வெள்ளம் காரணமாக உடைப்பெடுக்காத வகையில் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் கூடுதலான நேரத்தினை  செலவிட்டுக்கொண்டிருக்கின்றோம்.

இதற்கு மேலாக மாவட்டத்தின் தேர்தலை நியாயமான முறையின் நடாத்த வேண்டிய பொறுப்பும் என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமையினால், இந்த கடமையினையும்,  இந்த அனர்த்தத்துக்கு மத்தியில் கடமைகளை மேற்கொள்ளும் இத் தருவாயில் என்னைப்பற்றி அவதூறாக அனாமநேய முறையில் அரசியலுடன் இணைத்து செய்திகள் எழுதுவதினை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

வெள்ள அனர்த்தம் காரணமாக மாவட்டத்தின் மூலை, மூடுக்கெல்;லாம் செல்ல வேண்டியுள்ளது. இந்த வேலைப்பழுவினை மக்களின் அவசர தேவை காரணமாக மேற்கொள்ளும் போது இவ்வாறான அவதூறான செய்திகளினால் அதிகாரிகள் மக்கள் சார்பாக செய்யும் செயற்பாடுகளை மழுங்கடிக்கக் கூடாது.
மக்களோடு மக்களாக இருக்கும் அரச அதிகாரிகள் அனர்த்தம் ஏற்படுகின்ற போது அறிக்கைகளை விட்டுவிட்டு இருக்க முடியாது. மக்களை அனர்த்தத்தில் இருந்து மீட்டு, மீண்டும் அவர்களது சொந்த இடத்தில் குடியேற்றும் வரை எங்களின் முழுமையான பார்வை அவர்களுடனே இருக்கும். அத்தோடு இதற்கான நிதியினை பெற்று அதனை உரிய மக்களின் செயற்பாட்டிற்கு பங்களிப்பு செய்யும் வரை நாங்கள் மிகவும் அவதானத்துடனே இருப்போம்.

பாரிய வேலைப்பழுவுக்கு மத்தியில் மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்காகச் செயற்பட்டுக்;கொண்டிருக்கும் போது இவ்வாறான அவதூறான செய்திகளை ஊடகங்கள் வெளியிடக் கூடாது.

தேர்தலை கண்காணிப்பதற்கு சர்வதேச கண்காணிக்கும் குழு நியமிக்கப்பட்டு இருக்கிறது. அரச அதிகாரிகள் பக்கச்சார்பாகச் செயற்பட்டால் அதற்கான அறிக்கையிடுதல்களை இவர்களால் மேற்கொள்ள முடியும். அல்லது இவர்களிடம் முறையிடலாம் அதை விட்டு விட்டு அவதூறான செய்தியினை வெளியிடுவதனை தவிர்த்துக் கொள்வது சிறப்பானதாக அமையும்.
செய்திகளை வெளியிடும் ஊடகங்கள் அந்த செய்திகளை உரியவரிடம் கேட்டு அதனை உறுதிப்படுத்துதல் ஊடக தர்மமாகும்.  அவ்வாறான ஊடக தர்மத்தினை பேணாமல் இணையதளங்களில் செய்தியினை வெளியிடக்கூடாது. இதனை வன்மையாகக் கண்டிக்கின்றேன். இவ்வாறான செய்திகள் மீண்டும் வராமல் பார்த்துக் கொள்வது மக்கள் சார்பாக செயற்படுகின்ற ஒவ்வொரு ஊடகங்களின் தலையான கடமையாகும். என அதில் குறிப்பிடப் பட்டுள்ளது.

SHARE

Author: verified_user

0 Comments: