29 Dec 2014

வீதியை விட்டு விலகிய கார்

SHARE
வெள்ள நீர் தற்போது வரைக்கும் மட்டக்களப்பு மாவட்டம் - பட்டிருப்பு வெல்லாவெளி பிரதான வீதியினை ஊடறுத்துச் பாய்ந்த கொண்டிருக்கின்ற  இந்நிலையில். வெள்ள நீரினால் அடிபட்டு இக்குறித்த வீதியும் பழுதடைந்துள்ளது.

இன்று திங்கட் கிழமை காலை (29) போரதீவிலிருந்து களுவாஞ்சிகுடி நோக்கிப் பயணித்த கார் ஒன்று இக்குறித்த இடத்தில் வைத்து எதிரே வந்த வாகனம் ஒன்றிற்கு இடம் முற்படுகையில் வீதியை விட்டு விலகி குளத்தினுள் இறங்கயுள்ளது.

இந்நிலையில் அவ்விடத்தில் கடமையில் நின்ற இராணுவத்தினரதும், ஏனைய பியாணிகளினதும் ஒத்துழைப்புடனும், கார் வீதிக்கு எடுக்கப் பட்டது.














SHARE

Author: verified_user

0 Comments: