30 Dec 2014

இலங்கையில் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல் ஒன்று நடைபெறும்

SHARE
ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நம்பிக்கை தெரிவிப்பு!

இலங்கையில் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல் ஒன்று நடைபெறுமென தான் எதிர்ப்பார்ப்பதாக ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி எல் பீரிஸூடன் கடந்த வாரம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட மூன், இலங்கையின் நல்லிணக்கத்துக்கு ஐக்கிய நாடுகள் சபை என்றும் துணையிருக்கும் என்று உறுதியளித்துள்ளார்.

இதன்போது பதிலளித்த அமைச்சர் பீரிஸ், இலங்கையின் அனைத்து வாக்காளர்களும் பங்கேற்கும் வகையில் தேர்தல் நடத்தப்படுவதாக குறிப்பிட்டார். அத்துடன், சிறுபான்மையினரும் பயமின்றி வாக்களிக்கும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்(ad)
SHARE

Author: verified_user

0 Comments: