28 Dec 2014

முதலீட்டு திரும்பல்களுக்கு உத்தரவாதமளிக்கும் சதாஹரித

SHARE
வனவியல் முதலீடுகளில் சந்தை முன்னோடியாக திகழும் சதாஹரித பிளாண்டேஷன் நிறுவனம் முதலீட்டு திரும்பல்களை உறுதியளிக்கும் வகையில் Wescorp அவுஸ்திரேலியா நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது.

உலகில் மிகப்பெரிய ச
ந்தன எண்ணெய் விநியோகிப்பாளராக Wescorp அவுஸ்திரேலியா திகழ்வதுடன், தற்போது உலகின் மிகப்பெரிய அகர்வுட் எண்ணெய் வழங்குநராகுவதற்காக சதாஹரித பிளாண்டேஷன் ஊடாக சந்தனம் மற்றும் அகர்வுட்டினை கொள்வனவு செய்வதை உறுதி செய்யும் வகையில் அண்மையில் ஒப்பந்தம் மற்றும் பங்காண்மை மேற்கொண்டுள்ளது.
இலங்கை சதாஹரித குழுமத்தின் உறுப்பினரான சதாஹரித பிளாண்டேஷன் லிமிடெட் நிறுவனம், இந்திய சந்தனத்தினை இலங்கையில் ஸ்தாபிக்க மற்றும் மேலாண்மை செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

சதாஹரித நிறுவனமானது சந்தன வகைகளிலேயே மிகப் பெறுமதி வாய்ந்த வகையான Santalum albumகளை 150 ஹெக்டேருக்கும் அதிகமான நிலத்தில் பொருத்தமான இடங்களில் பயிரிட்டுள்ளதுடன், ஆண்டிற்கு 75-100 ஹெக்டேராக சந்தன செய்கையை விஸ்தரித்துள்ளது.

சந்தையில் புதிதாக நுழையும் மிகச் சிறிய நிறுவனங்கள் போன்ற நிச்சயமற்ற நிறுவனங்களுடன் இணைவதனூடாக அகர்வுட் உற்பத்தி தொழில்நுட்பம் மற்றும் அவர்களின் முதலீடு மீதான திரும்பல்கள் தொடர்பில் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும் என பொதுமக்களுக்கு சதாஹரித எச்சரித்துள்ளது.

´உலகின் மிகப்பெரிய சந்தன எண்ணெய் வழங்குநரான Wescorp அவுஸ்ரேலியாவுடன் நாம் ஓர் புரிந்துணர்வுக்கு வந்துள்ளோம். தாம் கடுமையாக உழைத்து முதலீடு செய்யும் பணத்தின் திரும்பல்களுக்கு நாம் எமது முதலீட்டாளர்களுக்கு உத்தரவாதமளிக்க இதுவே காரணமாகவுள்ளது´ என சதாஹரித பிளாண்டேஷன் நிறுவனத்தின் தலைவரும், முகாமைத்துவ பணிப்பாளருமான சதீஷ் நவரத்ன தெரிவித்தார்.

´சதாஹரிதவானது அதன் பெருந்தோட்டங்களின் தரத்தை மேம்படுத்தும் வகையில் 2009ஆம் ஆண்டிலிருந்து இலங்கையிலுள்ள விஞ்ஞானிகள் மற்றும் Wescorp விஞ்ஞானிகள் மற்றும் Wescorp பல்கலைக்கழகத்தின் மருந்தக கல்வியகத்துடன் இணைந்து ஸ்ரீ ஜயவர்தன பல்கலைக்கழகத்தின் வனவியல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் பிரிவினால் ஏற்பாடு செய்யப்படும் ஆராய்ச்சிகளுக்கு நிதியளித்து வருகின்றது´ என Wescorp கூட்டாண்மை இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சதாஹரிதவுடனான பங்காண்மையை மேலும் உறுதி செய்யும் வகையில் Wescorp நிறுவனம் தெரிவித்ததாவது, ´பிளாண்டேஷன் நிறுவனத்தின் தரம், முகாமைத்துவ நடைமுறைகள் மற்றும் நிபுணத்துவத்தின் அடிப்படையில் சதாஹரிதவானது தரமான சந்தன மரங்களை உருவாக்க சரியான வழியை மேற்கொண்டு வருகிறது என்று Wescorp நம்புகிறது.

இது உலகின் மிகப்பெரிய சந்தன வழங்குநரான Wescorp உடன் ஒன்றிணைய சதாஹரிதவிற்கு பெறுமதியான வாய்ப்பை வழங்கியுள்ளது´ என்றார்.
SHARE

Author: verified_user

0 Comments: