தொடர்ச்சியாக
பெய்து வருகின்ற மழையின் காரணமாக ஏற்பட்டுள்ள சேத விபரங்களை கண்டறியும்
வகையில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான மேஜர்
ஜெனரல் ரி திஸ்ஸ ரஞ்சித் டி சில்வா தலைமையில் விசேட கூட்டம் ஒன்று திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போது பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள மக்களுக்கு தேவையான அனைத்து வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்தும் வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக விசேடமாக ஆராயப்பட்டது.
அத்துடன் அனர்த்த முகாமைத்துவ நடவடிக்ககைள் தொடர்பாகவும் இதன்போது தெளிவுபடுத்தப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் அரசாங்க அதிபரின் வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இக்கூட்டத்தில் திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.அருள்ராசா, திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் திருமதி எஸ்.ஜலதீபன், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் விராஜ் திஸாநாயக்க உட்பட கிராம உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டார்கள்(nl)
0 Comments:
Post a Comment