மனித சமுதாயத்தில் மாற்றகளை ஏற்படுத்துவது அங்கு மேற்கொள்ளப்படும் ஆய்வுகளும்
வளர்ந்துவரும் நாடுகள் அதன் வளர்ச்சிக்காக ஆய்வுக்கான பங்களிப்பினை அதிகம் செய்து வருவதனைக் காணக்கூடியதாக இருக்கிறது.
யுத்தம், சுனாமி, மற்றும் வெள்ளம் போன்ற அனர்த்தங்களில் சிக்குண்ட வடகிழக்குப் பகுதிகளில் முன்னேற்றத்தினைக் கொண்டுவரக்கூடிய உத்திகளில் அங்கு உள்ள சவால்கள், பிரச்சினைகள், மற்றும் தேவைகளை நுட்பமாகக் கண்டறியக் கூடிய ஒரே வழி ஆய்வுகளை மேற்கொள்ளுவதுதான்.
இதனைக் கருத்தில் கொண்டு இளைஞர் விவகாரங்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சின் கீழுள்ள தேசியமனிதவள அபிவிருத்திச் சபையின் ஒருவேலைத்திட்டமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் நலிவுற்றவர்கள் மீதானஆய்வொன்று முன்னெடுக்கப் பட்டிருந்தது.
இதில் நலிவுற்றவர்களாக, கணவனை இழந்த பெண்கள், மனைவியை இழந்த ஆண்கள், மற்றும் பெற்றோரை இழந்த குழந்தைகளை கொண்ட குடும்பங்களை மாதிரியாகத் தெரிவு செய்து கடந்த யூன் 2014 இல் ஆரம்பித்த ஆய்வின் அறிக்கை முடிவுகளை மாவட்டரீதியில் சமர்ப்பிக்கும் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று செவ்வாய் கிழமை (23) சமர்ப்பிக்கப்பட்டு மாவட்ட, பிரதேசமட்டத்திலான முடிவுகள் மீதான பரிந்துரைகள், ஆலோசனைகள் மற்றும் கருத்துக்கள் கேட்டு அறிந்து கொள்ளப்பட்டன.
இந்த ஆண்வின் முடிவினை இளைஞர் விவகாரங்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சில் இருந்து வருகைதந்த உதவிப் பணிப்பாளர் சி.தணிகசீலன் அவர்கள் தொகுத்து வழங்கினார். இவர்களுடன் ஆய்வு உத்தியோகத்தர் திருமதி.அமாலி ரத்நாயக்க, த.செந்தில்நாதன் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.பிரபாத் ஆகியோரும் இதில் கலந்து கொண்டு நடாத்தினர்.
இந்த நிகழ்வில் முலலைத்தீவு மாவட்டச் செயலாளர் என்.வேதநாயகன் மற்றும், பிரதேச அங்குள்ள பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள், திட்டப் பணிப்பாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், இன்னும் பலர் இந்தமாநாட்டுச் செயலமர்வில் கலந்து கொண்டு இந்த அறிக்கை தொடர்பான கருத்துக்களையும், ஆலோசனைகளையும், வழங்கினர்.
இதன்போது கருத்து தெரிவித்த முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் என்.வேதநாயகன் ….
இந்த ஆய்வு மிகஆரோக்கியமான தொன்று இதன் பரிந்துரைகளை, முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து, தெரிவு செய்யப்படும் மாதிரிக் கிராமங்களில் அமுல்படுத்தப்படவுள்ளன.எனத் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment