26 Dec 2014

மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் தேசிய பாதுகாப்பு தின மட்டு. மாவட்ட நிகழ்வுகள்

SHARE
தேசிய பாதுகாப்பு தின மட்டக்களப்பு மாவட்ட நிகழ்வுகள் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

தேசிய பாதுகாப்பு தினத்தில் இன்றைய தினம், தேசியக் கொடியேற்றலையடுத்து, ஆழிப்பேரலைக்குப் பலியானோரை நினைவு கூர்ந்து இன்று காலை 9.25 முதல் 9.27 வரையான இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அரசாங்க அதிபரின் சிறப்புரையும் இடம்பெற்றது.

இன்றைய நிகழ்வில், மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர் நெடுஞ்செழியன், உதவி மாவட்ட ச் செயலாளர் எஸ்.ரங்கநாதன், அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் எஸ்.இன்பராஜன் மற்றும் திணைக்களத் தலைவர்கள் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், ஜனாதிபதி செயலக அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

தேசிய பாதுகாப்பு தினத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் இன்று விஷேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி, இந்தோனேஷியாவின் சுமாத்ரா தீவுக்கருகில் ஏற்பட்ட பூகம்பத்தைத் தொடர்ந்து தாக்கிய சுனாமி ஆழிப்பேரலை காரணமாக இலங்கை, இந்தோனேஷியா, இந்தியா, தாய்லாந்து, மலேஷியா, மாலைதீவு ஆகிய நாடுகளில் சுமார் 280,000 பேர் பலியாகினர். இதனால், இலங்கையில் மாத்திரம் 40ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியமை குறிப்பிடத்தக்கது.





SHARE

Author: verified_user

0 Comments: